இலங்கை | மியன்மாரிலிருந்து 20,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி


எதிர்பார்க்கப்படும் அரிசி பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக மியன்மாரிலிருந்து 20,000 மெட்றிக் தொன் அரிசியை இலங்கை அரசு இறக்குமதி செய்யவுள்ளது.

மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி

இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனா தெரிவித்துள்ளார்.

ஒரு மெட்றிக் தொன் அரிசியின் விலை 460 அமெரிக்க டாலர்கள் எனவும் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தினால் இவ்விறக்குமதி நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

உரத் தட்டுப்பாடு மற்றும் வெள்ளம் போன்ர பிரச்சினைகளால் இன்னும் ஆறு மாதங்களில் மோசமான அரிசி தட்டுப்பாடு ஏர்படும் சாத்தியமுண்டு எனப் பலரும் கூறிவரும் நிலையில் அதைச் சமாளிக்க இந் நடவடிக்கையை எடுத்துள்ளது. 100,000 மெட்றிக் தொன்கள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஏற்கெனவே அனுமதியளித்திருந்தது.