தொடர்ந்து, மூன்று வருடங்களுக்கு வருடாந்தம் 12% உயர்வு!
இப் பெருந்தொற்றின் பிடியிலிருந்து நாடு விடுபடாமலிருக்கும்போது, கடனில் மூழ்கிக்கொண்டிருக்கும் இலங்கை மின்சாரசபை தனது ஊழியர்களுக்கு கொழுத்த சம்பள உயர்வைக் கொடுப்பதாக அறிவித்துள்ளது.
இந்த வருடம் 25% உயர்வும், அடுத்த மூன்று வருடங்களுக்கு தலா 12% உயர்வும் ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் தலைவர் விஜித ஹேரத் நேற்று (15) அறிவித்துள்ளார். 2021-2023 க்கான இச் சம்பள உயர்வு, தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு அமைய ஏற்கெனவே அமைச்சரவையும், மின்சார சபையின் பணிப்பாளர் சபையும் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவாகுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இப் பேரம் பேசுதலின்போது, தம்மோடு ஒத்துழைக்கும்படி அமைச்சு தொழிற்சங்கங்களைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க இரு தர்ப்புக்களும் இம் முடிவுக்கு இணங்கியிருந்ததாக ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதே வேளை, இலங்கை மத்திய வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றுக்கு 85 பில்லிய ரூபாய்கள் கடனை, இலங்கை மின்சார சபை திருப்பித்தரவேண்டியுள்ளது. அதே போல இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இவ் வங்கிகளுக்கு ரூ.562 பில்லியன் தொகையைத் திருப்பிக்கொடுக்க வேண்டும். இக் காரணங்களினால் இலங்கையின் வங்கித் துறை சீர்குலைந்துபோகும் நிலையிலுள்ளது.