Sri Lanka

இலங்கை மனித உரிமை ஆணையத்தின் தலைவர் அம்பிகா சற்குணநாதன் பதவி விலகினார்!

பிந்திய செய்தி (மார்ச் 10, 2020): மனித உரிமைகள் சட்டத்தரணியும், செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன

கொழும்பு: மார்ச் 7, 2020

இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

அவரது பதவி விலகல் தொடர்பாக விரைவில் அறிக்கை ஒன்று வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆணையாளர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், மனித உரிமைகள் செயற்பாட்டளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் ஐ.நா. சபையின் நிரந்தரப் பணிப்பாளர் அலுவலகத்திலும், மனித உரிமைகள் ஆலோசகர் அலுவலகத்திலும், மனித உரிமைகள் ஆணையரின் சட்ட ஆலோசகராகவும், பலதரப்பட்ட பணிகளை ஆற்றியிருந்தார்.

அத்தோடு, கொழும்பிலிருக்கும் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளை தர்ம ஸ்தாபனத்துக்குத் தலைவராகவும், ஆசியா-பசிபிக் பெண்கள் மனித உரிமைகளுக்கான செயற்பாட்டு நிதியத்தின் உபதலைவராகவும், மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி மையத்தின் ஆலோசகர்களில் ஒருவருமாகவும் இருந்துவருகிறார்.