Spread the love

அடுத்த மாதம் (ஏப்ரல் 25) நடைபெறவிருந்த இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல், கொரோனாவைரஸ் தொற்றுக் காரணமாகக் காலவரையின்றிப் பின்போடப்பட்டுள்ளதென தேர்தல் ஆனையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

“உலக சுகாதார நிறுவனமே வந்து ‘சிறீலங்காவில் வைரஸ் இல்லையென்று நாளை சொன்னாலும்கூட ஏப்ரல் 25 அன்று தேர்தல்களை நடாத்துவதற்கு எங்களால் முடியாது” என அவர் தெரிவித்தார்.

மே, ஜூன், ஜூலை – எப்போ தேர்தல் நடைபெறுமென்று இப்போது எங்களால் கூறமுடியாது. அது வைரஸை நாம் எப்போது முறியடிக்கப்போகிறோன் என்பதைப் பொறுத்தது என அவர் தெரிவித்தார்.

இத் தேர்தல்கள் மூலம் தான் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியுமெனவும் அதன் மூலம் அரசியலமைப்பை மாற்றித் தனது அதிகாரங்களை மீட்டுக்கொள்ளலாமென ஜனாதிபதி ராஜபக்ச எதிர்பார்த்திருந்தார். தேர்தல்கள் பின்போடப்படுவதால் தற்போதிருக்கும் மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படக்கூடிய சூழ்நிலையும் ஏற்படலாம். அத்தோடு இந் நோய்த்தொற்றினால் பெருமளவு பணச் செலவு ஏற்படுமாகையால் சேவைகளை மட்டுப்படுத்தப்பட வேண்டிய சூழலும் உருவாகலாம். இதனால் மக்களின் ஆதரவு குறைவதற்கான சந்தர்ப்பங்களுமுண்டு.




இலங்கையில் இதுவரை 53 பேர் நோய்த் தொற்றாளர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, நாட்டின் சகல இறங்கு துறைகளும் வெளிநாட்டுப் பயணிகளின் வரவை நிறுத்தியுள்ளன.

Print Friendly, PDF & Email
Related:  வியட்நாம் | உயிரிழப்பு எதுவுமில்லாது முடித்துவைக்கப்பட்ட கோவிட் போர்