தமிழ்க் கட்சிகள் 19 ஆசனங்களைப் பெறும் – ‘தி ஐலண்ட்’
பிந்திய செய்தி: மாலை 7:00 மணி இலங்கை நேரம்
வாக்களித்த வீதம் 71%
- நுவர எலியா 75%
- பதுளை 74%
- திருகோணமலை 74%
- மொனராகல 74%
- வன்னி 73%
- ரத்தினபுரி 73%
- அம்பாந்தோட்டை 73%
- கொழும்பு 72%
- அம்பாறை 72%
- மட்டக்களப்பு 72%
- பொலனறுவ 71%
- கேகாலை 71%
- மாத்தறை 71%
- களுத்துறை 71%
- மாத்தளை 71%
- கண்டி 71%
- அனுராதபுரம் 71%
- காலி 69%
- குருநாகலை 69%
- கம்பஹா 69%
- யாழ்ப்பாணம் 64%
- புத்தளம் 63%
தேர்தல் முடிவுகள் (எதிர்பார்ப்பு): பெரமுன -118, பலவேகய-64, ஐ.தே.க. – 15, தமிழ்க் கட்சிகள்-19, ஜே.வி.பி.-9
(தி ஐலண்ட்)

இலங்கையின் 16 வது பாராளுமன்றத் தேர்தல் நாடு தழுவிய வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகியது. இதன் முக்கிய அம்சங்கள்:
- வாக்களிப்பு இன்று (ஆகஸ்ட் 5) காலை 7:00 மணிக்கு ஆரம்பமானது. மாலை 5:00 மணி வரை இது தொடரும்
- மொத்தம் 225 ஆசனங்கள் உள்ளன. இவற்றில் 196 வாக்களிப்பின் மூலமும், 29 தேசியப்பட்டியல் மூலமும் தெரிவுசெய்யப்படும்.
- 22 தேர்தல் மாவட்டங்கள் உள்ளன
- 16,263,885 பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள்
- 7,452 வேட்பாளர்கள். இவர்களில் 3,652 பேர் கட்சிகள் சார்பிலும், 3,800 பேர் சுயேட்சைக் குழுக்களாகவும் போட்டியிடுகிறார்கள்
- 12,985 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன
- 75-80% மக்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
- ஆகஸ்ட் 6 ம் திகதி காலை 7:00 மணிக்கு வாக்குகள் எண்ணுதல் ஆரம்பமாகும்
- பாதுகாப்புக்காக 69,000 பொலிசார் நியமிக்கப்பட்டுள்ளனர்
- கோவிட்-19 நோய்க்கட்டுப்பாட்டை நிர்வகிக்க 10,000 சுகாதார சேவை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்
தமிழர் பிரதேசங்கள்
- தமிழர்கள் வாழும் தேர்தல் மாவட்டங்கள்: யாப்பாணம் (07), வன்னி (06), திருகோணமலை (04), மட்டக்களப்பு (05), அம்பாறை (07)
போட்டியிடும் வேட்பாளர்கள் /கட்சிகள்
- வட மாகாணம் – யாழ்ப்பாணம் வன்னி (தொடுப்பை அழுத்தி பட்டியலைப் பார்க்கலாம்)
- கிழக்கு மாகாணம் – திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை
2015 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்
- 15 வது பாராளுமன்றம்
- தேர்தல் நாள்: ஆகஸ்ட் 17, 2015
- வெற்றிபெற்ற கட்சி: நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி (United National Front for Good Governance – UNFGG) – 106 ஆசனங்கள் (பெரும்பான்மை கிடைக்கவில்லை)
- இதஹ்ர கட்சிகளின் நிலை: UPFA-95, TNA-16, JVP-6, SLMC-1, EPDP-1
- பிரதமர்: ரணில் விக்கிரமசிங்க (ஐ.தே.க.)
- எதிர்க்கட்சித் தலைவர்: இரா.சம்பந்தன் (இ.த.அ.க.)
2020 தேர்தல்
இந்த வருட தேர்தலின் முக்கிய அம்சங்கள்
- ஜனாஹிபதி ராஜபக்ச எந்தவொரு கட்சியினதும் உறுப்பினரில்லை
- ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும், சஜித் பிரேமதாசவின் சமாகி ஜன பலவேகயவும், பங்காளிக் கட்சிகளைக் கொண்ட புதிய கட்சிகள். இரண்டு பழைய கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஏறத்தாள படு தோல்வியை எதிர்நோக்கியுள்ளன.
எதிர்பார்ப்புகள்
இந்த வருடத் தேர்தல் முடிவுகள் இப்படியிருக்குமென எதிர்ப்பர்க்கப்படுகிறது”
கட்சிகள் | ஆசனங்கள் |
---|---|
சிறீலங்கா பொதுஜன பெரமுன | 118 |
சமாகி பல வேகய | 64 |
ஐ.தே.க. | 15 |
ஜே.வி.பி. | 9 |
தமிழ்க் கட்சிகள் | 19 |