இலங்கை: பணத்தட்டுப்பாட்டினால் வெளிநாடுகளிலுள்ள பல தூதரங்கள் மூடப்படுகின்றன

இலங்கையில் நிலவிவரும் மிக மோசமான பொருளாதார நிலைமையால் வெளிநாடுகளிலுள்ள பல தூதரகங்கள், உயர்ஸ்தானிகரலுவலகங்கள், இணைத் தூதரகங்கள் ஆகியவற்றைப் பராமரிக்க முடியாமையால் அவற்றை மூடுவதற்கு வெளிவிவகார அமைச்சு முடிவுசெய்துள்ளது.

இம் முடிவின் பிரகாரம் பாக்தாத் (ஈராக்) மற்றும் ஒஸ்லோ (நோர்வே) நகரங்களிலுள்ள தூதரகங்கள் இம்மாதம் (மார்ச்) 31 முதல் மூடப்படுகின்றன. பாக்தாத் தூதரகத்தின் நிர்வாகத்தை துபாயிலுள்ள இலங்கைத் தூதரகமும், ஒஸ்லோ தூதரகத்தின் நிர்வாகத்தை ஸ்ரொக்ஹோம், சுவீடனிலுள்ள துணைத்தூதரக அலுவலகம் பொறுப்பேற்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று சிட்னியிலுள்ள (அவுஸ்திரேலியா) தூதரகமும் மார்ச் 31 இல் மூடப்பட்டு அதன் அலுவல்கள் கான்பெராவிலுள்ள உயர் ஸ்தானிகர் அலுவலகத்துக்கு மாற்றப்படுகிறது.

இதுவரை உலகமெங்கும் இயங்கிவந்த தூதரகங்களின் எண்ணிக்கை, மார்ச் 31 முதல் 60 ஆகக் குறைக்கப்படுமென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.