இலங்கை: தொடரும் நில அபகரிப்பு
கடந்த சில நாட்களில் நடைபெற்றதாகச் செய்தியொன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. இதன் மூலம், காலம் பதிவில் காணப்படவில்லை. இச்செய்தியில் இடம்பெற்றுள்ள நில அடையாளங்கள் சமீப காலமாக பேசப்பட்டவை என்ற வகையில் இச்செய்தி உண்மையாக இருக்கலாமென்ற நம்பிக்கையில் மீளவும் பகிரப்படுகிறது.
- திருகோணமலை பெரியகுளம் உச்சி பிள்ளையார் மலையில் விகாரை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. அங்கிருந்த நாகதம்பிரான் சிலை தகர்த்து எறியப்பட்டு இருக்கிறது.
- மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பகுதியில் மீண்டும் புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கின்றது.
- மட்டக்களப்பு குடும்பிமலை (தொப்பிகல) சூழலிலும் புதிய புத்தர் குடியமர்த்தப்பட்டு இருக்கின்றார்
- யாழ்ப்பாணம் பறாளாய் முருகன் ஆலய சூழலிலுள்ள அரச மரம் பௌத்த மதத்திற்குரிய அடையாளம் என வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது
- வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய மீள் நிறுவல் பெளத்த மக்களுக்கெதிரான மனித உரிமை மீறல் எனத் தெரிவித்து கச்சல்சமளங்குளத்தில் அடாத்து விகாரை அமைத்து வருகின்ற கல்கமுவ சந்தபோதி பிக்குவும், ஓய்வுபெற்ற இராணுவ கேணல் ஒருவரும் உச்சநீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்
- உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் ஆய்வு பணிகளை நடத்தி இருக்கின்றது
- குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாடு நடத்த சென்ற பொதுமக்கள் நீதிமன்ற உத்தரவை மீறி தாக்கப்பட்டு இருக்கின்றார்கள். குறித்த வன்முறையில் ஈடுபட்ட பொலிஸார் மீது நடவடிக்கை எடுப்பதாக திரு ரணில் விக்ரமசிங்கே வாக்குறுதி வழங்கி மூன்று வாரங்கள் கடந்து விட்டது
- திருகோணமலையில் 6,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள பானமுர திலகவன்ச என்கிற பிக்கு தென்னமரவாடி மற்றும் சிங்கபுர பகுதி மக்களின் 162 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சிக்கின்றார்
- சங்கமலை பகுதியிலும் காணிகளை அபகரிக்க முயற்சிக்கின்றனர்
- இராணுவத்தினருக்காக செம்பியன்ப்பற்று, கட்டைக்காடு, முள்ளியான் உட்பட வடமராட்சி கிழக்கு எங்கும் தொடர்ச்சியாக காணிகளை அபகரிக்க முயலுகின்றார்கள்
- முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அக்கரைவெளியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 1,500 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்க மகாவலி அதிகாரசபை முயற்சிக்க தொடங்கி இருக்கின்றது. இந்தப் பகுதியில் மட்டும் 11 சிங்கள மக்களுக்கு தலா 25 ஏக்கர் படி காணி வழங்கப்பட்டு இருக்கின்றது
- முல்லைத்தீவு _புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வனவள திணைக்கள அதிகாரிகள் முன்னாள் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து அடாவடிகளில் ஈடுபட்டு இருக்கின்றனர்
- வவுனியா வடக்கு நயினாமடுவில் சீன நிறுவனம் ஒன்று சீனி தொழிற்சாலை அமைக்க சுமார் 7500 ஏக்கர் காணி வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன
- யாழ்ப்பாண தீவக நிலப்பரப்பை மத்திய ஆசின் அதிகார சபை கட்டமைப்புக்கள் கொண்டுவர தேவையான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு இருக்கின்றது
- யாழ்ப்பாணத்தில் 2,500 ஏக்கர் காணியை வனவள திணைக்கள கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான வரைபடம் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கின்றது
- கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி் விடயம், கண்டும் காணாது விடப்பட்டுள்ளது
.