Spread the love

எதிர்பார்ப்புகள்

 • சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குப் பெரும்பான்மை (115- 130)
 • மூன்றிலிரண்டு பெரும்பான்மை சாத்தியமில்லை
 • சமாகி பலவேகய 50-60 ஆசனங்களைப் பெறலாம்
 • ஐ.தே.கட்சி 10 க்கும் குறைவான ஆசனஙகள்
 • கொழும்பு மத்தியில் விமல் வீரவன்ச முதலிடம்
 • பிள்ளையான் வெற்றி பெற்றால் அமைச்சர் பதவி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

வாக்களிப்பு முடிந்து விட்ட நிலையில், தென்னிலங்கையைச் சேர்ந்த இரண்டு வெவ்வேறு கருத்துக்கணிப்புகள் ஏறத்தாழ ஒரே விதமான தேர்தல் முடிவுகளை எதிர்கூறுகின்றன. ‘தி ஐலண்ட்’ பத்திரிகையும் பிரதீப் சனகா எனும் ஆய்வாளர் ஒருவரும் தமது கருத்துக்கணிப்புகளை அறிவித்துள்ளனர். இதன் பிரகாரம் கிடைக்கக்கூடிய ஆசனங்கள்:

 • சிறிலங்கா பொதுஜன பெரமுன 115-137
 • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 15-19
 • சமாகி ஜன பலவேகய 50-57
 • ஐ.தே.க. 5-7
 • ஜே.வி.பி. 3-5

பிரதீப் சனகாவின் ஆய்வின்படி, யாழ்ப்பாணத்தில் சிவஞானம் சிறீதரன், வன்னியில் சார்ள்ஸ் நிர்மலநாதன், திருகோணமலையில் இரா சம்பந்தன், மட்டக்களப்பில் சீனித்தம்மொஇ யோகேஸ்வரன், அம்பாறை மாவட்டத்தில் கோடீஸ்வரன் ஆகியோர் முதலாமிடங்களைப் பிடிப்பார்கள் எனவும், எம்.ஏ.சுமந்திரன் இரண்டாம் இடத்தில் வரலாமெனவும் எதிர்பார்க்கிறார். யாழ்ப்பாணத்தில் இமானுவேல் ஆர்ணோல்ட், ஈஸ்வரபாதம் சரவணபவன், மாவை சேனாதிராஜா, வேதநாயகம் தபேந்திரன் உட்பட 6 பேர் தெரிவுசெய்யப்படலாம் என அவர் கருதுகிறார்.

பிள்ளையான்

முன்னாள் விடுதலைப் புலிகள் போராளியும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான, பிள்ளையான் என அழைக்கப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் இத் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், அவருக்கு மந்திரிப் பதவி வழங்கத் தயாராகவுள்ளதாக அறியப்படுகிறது.

பிள்ளையான் தற்போது தடுப்புக் காவலில் இருந்தபடியே, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில், தேர்தலில் போட்டியிடுகிறார். சில தொகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலும், சில தொகுதிகளில் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பிலும் அவரது வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஆனால், அவர் தேர்தலில் வெற்றியீட்டுவது மட்டுமல்லாது, தடுப்புக் காவலிலிருந்து பிணையில் வெளியே வருவதையோ அல்லது முற்றாக விடுதலை பெறுவதையோ அவர் முதலில் செய்தாகவேண்டுமென சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமைப்பீடம் கூறிவிட்டதாகவும் தெரியவருகிறது.

முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசெப் பராராஜசிஙகம் அவர்களைக் கொலைசெய்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டு அவர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கருணா தெரிவித்த கருத்துக்கள் தென்னிலங்கையில் பலத்த எதிர்ப்புக்களைத் கிளப்பியிருந்தது. கருணாவுக்கோ, பிள்ளையானுக்கோ மந்திரிப்பதவி கொடுப்பதற்கு தென்னிலங்கையில் பலத்த எதிர்ப்பு இருந்தும்கூட, அது கிழக்கு மாகாணத்தில் தமது தேர்தல் முடிவுகளைப் பாதித்துவிடக்கூட்டது என்பதற்காக கருணா, பிள்ளையான் போன்றவர்களின் ஆதரவாளர்களுக்கு ராஜபக்சக்கள ஆசை வார்த்தைகளைச் சொல்லிவிட்டு தேர்தல் வெற்றிக்குப் பிறகு வழக்கமான பாணியில் அவர்கள் கழற்றிவிடப்படுவார்கள் எனவே எதிர்ப்பார்க்கப்படுகிறது. பிள்ளையானின் ஆதரவாளர்கள் பலரும் இப்படியான கருத்தையே கொண்டிருப்பதாகவும் அறியப்படுகிறது.

Related:  பா.உ. சீ.வி.விக்னேஸ்வரனின் "மூத்த தமிழ் மொழி' பேச்சை பதிவேட்டிலிருந்து நீக்கும்படி சபாநாயகரிடம் வலியுறுத்து

1988 இல் நடைபெற்ற ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் மூன்றாவது குற்றவாளியான பிள்ளையானுடன், மொத்தம் ஆறுபேர் பயங்கவாதத் தடைச் சட்டத்தின்கீழ் மட்டக்களப்பு உயர்நீதிமன்றத்தால் தடுப்புக்காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்கள் காலவரையின்றி விளக்கமறியலில் வைக்கப்படலாம் என்பதற்காக பிள்ளையான் போன்றோரைக் கொலைக்காகக் குற்றம்சாட்டாமல் இப்படி வேண்டுமென்றே இழுத்தடிக்கிறார்கள் என பிள்ளையான் சார்பான வழக்கறிஞர்கள் தெரிவித்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.தேர்தல் ஆணையாளரின் ஊடக சந்திப்பு

வாக்குகள் எண்ணப்படுவது காலை 7:00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டாலும், உத்தியோகபூர்வமான முதலாவது தேர்தல் முடிவு, ஆகஸ்ட் 6ம் திகதி, இலங்கை நேரம் பி.ப. 2:30 மணிக்கு அறிவிக்கப்படுமெனவும் மாலை 6:00 மணி அல்லது வெள்ளி காலை அனைத்து அறிவிப்புகளும் முடிந்துவிடுமெனத் தான் எதிர்பார்ப்பதாகவும், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 10, திங்களன்று தேசியப் பட்டியல் வெளியிடப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை தேர்தல்கள் | பிந்திய செய்திகள்: த.தே.கூட்டமைப்புக்கு 15-19 ஆசனங்கள் வரை கிடைக்கலாம்? 1
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் ஆணையத்தின் கருத்துப்படி 11 மில்லியன் வாக்க்களர்கள் வாக்களித்துள்ளனர் எனவும், இது மொத்த வாக்காளார் எண்ணிக்கையில் 71% எனவும் அறிவிக்கப்படுகிறது.

வாக்க்குச் சாவடிகளிலில் இருந்து வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக எண்ணப்படும் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்படுமென்பதைத் தான் உறுதிசெய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email
இலங்கை தேர்தல்கள் | பிந்திய செய்திகள்: த.தே.கூட்டமைப்புக்கு 15-19 ஆசனங்கள் வரை கிடைக்கலாம்?

இலங்கை தேர்தல்கள் | பிந்திய செய்திகள்: த.தே.கூட்டமைப்புக்கு 15-19 ஆசனங்கள் வரை கிடைக்கலாம்?