Sri Lanka

இலங்கை | தேசிய மொழிகள் சமத்துவ முன்னெடுப்புத் திட்டத்திற்கு (NLEAP) கனடா உதவி

இனங்களுக்கிடையேயான நல்லிணக்கமே நோக்கம்

தேசிய மொழிகள் சமத்துவ முன்னெடுப்புத் திட்டம் (National Languages Equality Advancement Project (NLEAP)) எந்ற பெயரில் போருக்குப் பின்னான இன நல்லிணக்க முயற்சிகளில் கனடிய அரசின் உதவியின் கீழ் சர்வதேச அபிவிருத்தி ஆலோசனை நிலையத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு தாம் தொடர்ந்தும் ஆதரவை வழங்குவோம் என இலங்கைக்கான கனடிய தூதுவர் எரிக் வால்ஷ் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தை சர்வதேச அபிவிருத்தி ஆலோசனை அமைப்பான அலினியா இன்டர்நாஷனல் என்னும் நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. இதன் முக்கிய நோக்கம் போருக்குப் பின்னான இன நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதுதான் என இத்திட்டத்தின் பணிப்பாளர் மைக்கேல் எம்பிளெம் தெரிவித்திருக்கிறார்.

NLEAP திட்டத்தின் பூரணத்துவத்தைக் கொண்டாடும் முகமாக கனடிய-இலங்கை அரசுகளினால் ஒழுங்குசெய்யப்பட்ட இரண்டு நாள் மாநாடு கொழும்பு காலிமுக ஓட்டலில் நடைபெற்றது. இதில் பங்குபற்றிய கனடிய தூதுவர் எரிக் வால்ஷ் மற்றும் இலங்கையின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனா ஆகியோர் இத்திட்டத்தைத் தொடர்வதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

அரச கரும மொழிகள் திணைக்களம், மொழிக்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய நிறுவனம் (NLEAT), அரச கரும மொழிகள் ஆணையம் (OLC) ஆகியவற்றின் செயற்பாடுகளை முன்னெடுக்க கனடிய உதவி காரணமாக அமைந்திருந்தது. (படம்: தி மோர்ணிங்)