இலங்கை | தனிமைப்படுத்தும் ஊரடங்கு, அக்டோபர் 1 இல் முடிவுக்கு வருகிறது
இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் நடைமுறையிலிருந்த ‘தனிமைப்படுத்தும் ஊரடங்கு’ (quarantine curfew) அக்டோபர் 1, காலை 4:00 மணிக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படுகிறது.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், இது நடைமுறைப்படுத்தப்படுவதாக கோவிட் கட்டுப்பாடுக்கான தேசிய செயற்பாட்டுச் சபையின் தலைவர் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
ஊரடங்கு நீக்கத்தின் பின்னரான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் பற்றிய விடயங்களை விரைவில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பார் என சில்வா தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 20, இரவு 10:00 மணியிலிருந்து இத் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் இருந்துவருகிறது.