அறிவித்தல்கள்

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: பொது வேட்பாளர் நியமனம் பலன் தராது – WTSL

நடக்கவிருக்கும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக ஒரு பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பது குறித்து சில தரப்பினரால் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்படியிருக்க பொது வேட்பாளர் நியமனம் தமிழ் மக்களின் அபிலாட்சைகளுக்குக் குந்தகமாகவே முடியும் எனக்கூறி மெல்போர்ண், அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் இலங்கைவாழ் தமிழர் நலன் விரும்பிகள் (Well-wishers Of Tamils in Sri Lanka (WTSL)) என்னும் சர்வதேச வலையமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது.