Sri Lanka

இலங்கை| சட்டமா அதிபரை உதாசீனம் செய்யும் பொலிஸ் திணைக்களம்

பெப்ரவரி 07, 2020

உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஹான் பிலிபிட்டிய பதவி விலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகத் தனது ஆலோசனைகளுக்கு ஏன் கீழ்ப்படியவில்லையென சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்கிரமரத்தினவிடம் விளக்கம் கோரியுள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதி ஜிஹான் பிலபிட்டியவின் வழக்கு தொடர்பாக நீதிக் கருமங்களை ஆரம்பிக்கும்படி சட்டமா அதிபர் பணித்திருந்தும் அக் கட்டளை மீது பொலிஸ் மா அதிபர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த சட்டமா அதிபர் எதிர்வரும் திங்கட் கிழமைக்கு (10) முதல் அத்ற்கான விளக்கத்தை அளிக்கவேண்டுமெனப் பணித்துள்ளதாக ராஜாங்க வழக்கறிஞர் நிஷாங்க ஜயரத்ன தெரிவித்தார்.

பதவி நீக்கப்பட்ட நீதிபதி ஜிஹான் பிலபிட்டியாவைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றப்பிரிவின் பணிப்பாளருக்கு ஏற்கெனவே கட்டளை பிறப்பித்திருந்தும் அது நிறைவேற்றப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஞன் ராமநாயக்கா பொய்யான சாட்சியங்களை உருவாக்க நீதிபதி பிலப்பிட்டியாவும் இணைந்து செயற்பட்டார் என்ற காரனத்தை முன்வைத்து அவரைக் கைதுசெய்யும்படி சட்டமா அதிபர் கட்டளை பிறப்பித்திருந்தார்.

இருப்பினும், குற்றப்பிரிவின் பணிப்பாளர் விக்கிரமரத்னா, சட்டமா அதிபரின் கட்டளையை ஆரய்வதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவொன்றை நியமித்திருந்தார். இது சட்டமா அதிபரை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது.