இலங்கை | கைகளை மீறிப்போன கோவிட் தொற்று – நாட்டின் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன

நாடு முழுவதும் கோவிட் – டெல்ற்றா திரிபினால் தொற்றுக்குள்ளாகிய நோயாளிகள் மருத்துவமனைகளில் படுக்கைகள், சிகிச்சை வசதிகளிந்றி அவதிப்படுவதாக அறியப்படுகிறது. டெல்ற்றா திரிபின் வரவுக்குப் பிறகு, நிலைமை மிகவும் மோசமாகப் போய்விட்டதெனவும், தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது நாட்டின் சுகாதாரத் துறை திண்டாடுகின்றது எனவும் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தேசிய மருத்துவமனைகளில் படுக்கைகள் போதாமையினால், ஆதார வைத்தியசாலைகளுக்கு நோயாளிகள் அநுப்பப்படுவதாகவும் அங்கும் படுக்கைகள் கிடைக்காமையால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதகவும் தெரியவருகிறது, அடுத்துவரும் நாட்கள் மிகவும் மோசமானதான இருக்குமென மருத்துவர்கள் எச்சரிக்குமளவுக்கு நிலைமை இருக்கிறது.

அப்படியிருந்தும் நாட்டில் நடமாட்ட முடக்கம் பற்றிய பேச்சுக்கூட இதுவரை எழவில்லை. டெல்ற்றா திரிபைப் பரப்புபவர்கள் நாட்டில் தங்குதடையின்றிப் பிரயாணம் செய்கிறார்கள் எனவும் நிலைமை கட்டுக்கடங்காமல் போனால் நாடு தழுவிய முடக்கமொந்றை மருத்துவ சமூகம் கோருவதற்கான சந்தர்ப்பமுண்டெனவும் தெரியவருகிறது. ஆனால் கடந்த ஒருமாத முடக்கத்தின் பின்னர் வெளிவந்திருக்கும் நிலையில் நாடு இன்னுமொரு முடக்க நடவடிக்கைக்குத் தயாரில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

தடுப்பூசி வழங்கலைப் பொறுத்தவரை, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் எனினும், இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றவர்களையும் டெல்ற்றா திரிபு தொற்றிக்கொண்டுள்ளமை மக்கள் மனங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. முழுமையாகத் தடுப்பூசி எடுத்தவர்கள் மீண்டும் தொற்றுக்குள்ளாகும்போது தொற்றின் வீரியம் குறைவாகவும் அறிகுறிகள் மென்மையாகவும் இருக்கின்றதை மனதில் வைத்து தொடர்ந்து தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளுமாறு சுகாதாரப் பணியாளர் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள்.

இலங்கையில் தற்போது நாளொன்றுக்கு 200,000 முதல் 300,000 பேர் வரையில் தடுப்பூசிகளைப் பெற்று வருகிறார்கள். இருப்பினும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதாகக் கருதும் மேற்கு மாகாணத்தில் 600,000 பேர் இரண்டாவது ஊசிக்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் கோவாக்ஸ் திட்டத்திந்கீழ் யப்பானிலிருது கிடைக்குமென அரசாங்கம் அறிவித்திருந்த 1 மில்லியன் டோஸ்கள் இன்னும் வந்துசேரவில்லை.