இலங்கை குறித்த அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் மனித உரிமைகள் முக்கிய இடம் பெறும் – உதவி ராஜாங்கச் செயலாளர்
அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ வைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு எம்.ஏ.சுமந்திரன், திரு. சாணக்கியன் ராசமாணிக்கம் மற்ரும் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் நேற்றுச் சந்தித்தனர்.
இச் சந்திப்பைத் தொடர்ந்து உதவிச் செயலாளர் வெளியிட்ட தன் ருவிட்டர் செய்தியில் இலங்கை குறித்த அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் மனித உரிமைகள் முக்கிய இடத்தை வகிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
நீண்ட கால சமாதானமான வாழ்வை நோக்கிய இலங்கைத் தமிழ் மக்களின் அபிலாட்சைக்கு அமெரிக்க எப்போதும் உறுதுணையாக இருக்குமெனவும், இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் அவர்களுக்கு முழுமையான பங்குண்டு எனவும் உதஹ்விச் செயலாளர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பைத் தொடர்ந்து தமிழர் தரப்பு, வெள்ளை மாளிகை அதிகாரிகள் உட்படப் பலருடனும் வெவ்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தனர்.
இச் சந்திப்புகளின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (23) கனடிய பாராளுமன்றத்தில் மேலும் பல சந்திப்புக்களையும் மேற்கொண்டிருந்தார்கள்.