NewsSri Lanka

இலங்கை: காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.100,000 நட்ட ஈடு!

போர் அல்லது பாதுகாப்பு படைகளினால் காணாமலாக்கப்பட்டவர்கள் என்ற பதங்கள் எங்கும் பாவிக்கப்படவைல்லை

காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஒரு தடவை கொடுப்பனவாக தலா ரூ.100,000 நட்ட ஈட்டை வழங்குவதற்கு இலங்கை பாராளுமன்றத்தின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.

‘பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு காரணங்களுக்காக தனிப்பட்ட ரீதியில் காணாமல் போனவர்களின் குடும்பங்களது புனர்வாழ்விற்காக உருவாக்கப்பட்ட நட்டஈடு வழங்கல் திட்டங்கள், வரையறைகளின் கீழ்’ இக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. போர் அல்லது இராணுவம், பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகள் காரணமாக காணாமல் போனவர்கள் என்ற பதங்கள் இங்கு பாவிக்கப்படவில்லை.

இதன் மூலம் சகல இலங்கையர்கள் மத்தியில் எதிர் காலத்தில் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்க முடியுமென அரசு நம்புவதாகத் தேரிவிக்கப்பட்டுள்ளது. காணாலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒன்றில் மரணச் சாட்சிப் பத்திரங்களை வழங்கவோ அல்லது அவர்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பிக்கவோ பதிவாளர் நாயகத்தை காணாமலாக்க்கப்பட்டவர்களின் அலுவலகம் பணித்துள்ளது.

பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட இறப்புச் சாட்சிப் பத்திரத்தைக் காட்டி காணாமலாக்கப்பட்டவர்களின் உடனடிக் குடும்ப உறுப்பினர் ஒருவர் விண்ணபிக்கும் பட்சத்தில் அமைச்சரவையால் அனுமதியளிக்கப்பட்ட இந் நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. (நியூஸ்வயர்)