Sri Lanka

இலங்கை: ஆங்கிலத்தை தேசிய மொழியாக்க ஜனாதிபதி உறுதி

சீன, ஜப்பானிய, அரேபிய, இந்தி மொழிகளுக்கும் இதே அந்தஸ்து வழங்கப்படும்

அடுத்த ஐந்து வருடங்களில் ஆங்கிலத்தை தேசிய மொழியாக்குவேன் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆங்கிலக் கல்வி மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தியின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்திய அவர் அடுத்த ஐந்து வருடங்களுக்குள் ஆங்கிலக் கல்வியைத் தேசிய மொழியாக்குவதுடன் ஆங்கில மொழியைப் போதிப்பதற்குத் தேவையான ஆசிரியர்களையும் வளங்களையும் தான் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளார். அதே வேளை ஆங்கில மொழிக்கு மட்டுமல்லாது சீன, ஜப்பானிய, அரேபிய, இந்தி மொழிகளுக்கும் இதே அந்தஸ்து வழங்கப்படவேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (ஜூன் 16) அலரி மாளிகையில் நடைபெற்ற 2018-2022 கல்வியாண்டிற்கான தேசிய கல்வி டிப்ளோமா சான்றிதழ்களுடன் ஆசிரிய நியமனங்களை வழங்கும் வைபவத்தில் பேசும்போது ஜனாதிபதி விக்கிரமசிங்க மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்திருந்தார். (Image Credit: Radiant Readers Academy))