Sri LankaVolunteer Orgs.

இலங்கை | அறம் நம்பிக்கை நிதியத்தின் கோவிட்-19 நிவாரண முயற்சிகள்

தற்போது இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும், கோவிட்-19 நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால் வருமானத்தை இழந்து பட்டினியை எதிர்நோக்கும் இலங்கையின் வடக்கு-கிழக்கு மற்றும் மலையகம் வாழ் மக்களின் துயர் துடைக்க, ‘அறம் நம்பிக்கை நிதியம்‘ ‘கோவிட்-19 நிவாரண முயற்சிகள்’ என்ற பெயரில் சில செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

போருக்குப் பின்னான வாழ்வாதார செயற்பாடுகளை நீண்டகாலமாக முன்னெடுத்து வருவதனால், இவ்வமைப்பு, ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும், அங்கு நிவாரணம் தேவைப்படும் குடும்பங்களையும் அடையாளம் காணக்கூடியதாகவும், உடனடியாக அந் நிவாரணத்தை தேவையான மக்களிடம் சேர்க்கும் வகையிலான கட்டமைப்பை ஏற்படுத்தியும் இருந்தது.

இதன் பிரகாரம், ரூ. 1,000,000 பெறுமதியான உணவுப் பொருட்களை, இலங்கையின் பல பகுதிகளுக்கும் விநியோகித்திருக்கிறது.

மாவட்ட ரீதியில் இவ் விநியோகம் (இலங்கை ரூபாய்களில் ) பின்வருமாறு:
  • வன்னி – 450,000
  • கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் – 250,000
  • மடடக்களப்பு – 150,000
  • மாத்தளை – 100,000
  • மாத்தறை – 50,000

இவ் விநியோகம் திறம்படச் செயற்படுவதற்கு அருட் தந்தை ரமேஷ், சூர்யா, நீல் மற்றும் ஞானக்குமார் அவர்கள் மகத்தான பணியாற்றியிருந்தார்கள்.

நிவாரண உதவிகளைப் பெற்றவர்களின் படங்களை வெளியிடுவதை ‘அறம்’ விரும்பவில்லை என அதன் பேச்சாளர் கூறினார்.