இலங்கை | அரிசியின் கட்டுப்பாட்டு விலை நீக்கம் – ஆலை முதலாளிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்தது அரசு


அரிசியின் மீது விதிக்கப்பட்டிருந்த மொத்த, சில்லறை விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது.

செப். 27, அமைச்சரவைக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அரிசியின் விலையை அதிகரிக்காவிட்டால் தாம் அரிசியை உற்பத்திசெய்ய மாட்டோமென்று ஆலைச் சொந்தக்காரர்கள் அரசாங்கத்துக்கு விடுத்த எச்சரிக்கைக்கு அடிபணிந்து உச்ச விலை நிர்ணயத்தை அரசு மீளப்பெற்றிருக்கிறது. அதிகரிக்கும் அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் சமீபத்தில், விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் உச்ச விலை நிர்ணயத்தைச் செய்திருந்தது. (லங்கா நியூஸ் வெப்)