மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவி பிரதமர் பதவி வழங்கப்பட மாட்டாது
இரட்டைக் குடியுரிமை உள்ளவர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாம்
ஆகஸ்ட் 31, 2020: இலங்கை அரசியலமைப்பின் 20 திருத்தத்திற்கான வரைவு சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபரின் அங்கீகாரத்திற்காக வெள்ளியன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரது அபிப்பிராயங்களுடன் அது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் சரத்துகள் மீள்பார்வை செய்யப்பட்டதும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இதில், பெருமளவு எதிர்பார்க்கப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி சிறிசேனாவுக்கான விசேட துணைப் பிரதமர் பதவி அல்லது அதற்குச் சமமான விசேட பதவிஒன்றை உருவாக்குவது குறித்த திருத்தம் இடம்பெறவில்லை எனச் செய்திகள் கசிந்துள்ளன.
இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள் இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடமுடியாது எனப் 19 வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சரத்து 20 வது திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளதெனத் தெரிகிறது.
18 வது, 19 வது திருத்தங்களிலுள்ள் சில சரத்துக்கள் பேணப்பட்டாலும் பல மாற்றத்துக்குள்ளாகின்றன. சுயாதீன ஆணையங்கள் தொடர்ந்து இயங்குவதோடு அவற்றை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும். பாராளுமன்றத்தை நாலரை வருடங்களில் கலைக்கவேண்டுமென்ற சரத்து நீக்கப்படும்.
செப்டம்பர் மாதம் நடுப்பகுதியளவில் 20 வது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் எனத் தெரிகிறது.