இலங்கை | அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள்
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஜநாதிபதி ராஜபக்ச பாரிய மாற்றங்களைச் செய்யவுள்ளதாக அறியப்படுகிறது. வெளிவிவகாரம், சுகாதாரம், கல்வி, சுற்றுலா, ஊடகம் ஆகிய அமைச்சுகள் இவற்றில் முக்கியமானவையாகும்.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி, கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகாரத்துக்கும், தற்போதைய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா உயர் கல்வி அமைச்சராகவும் நியமனம் பெறுகிறார்கள்.
கோவிட் கட்டுப்பாட்டு விவகாரங்களில் பல விமர்சனங்களை எதிர்கொண்டுவரும் பவித்திரா வன்னியாராச்சியிடமிருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டு தற்போதைய தோட்டத் தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரானவிற்குக் கொடுக்கப்படுகிறது. தோட்டத் தொழில் அமைச்சு தற்போதைய ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கும், ஊடக அமைச்சு தற்போதைய மின்சார அமைச்சர் டள்ளஸ் அழகப்பெருமாவிற்கும் அவரிடம் தற்போதுள்ள மின்சார அமைச்சு பவித்திரா வன்னியாராச்சிக்கும் கொடுக்கப்படுகிறது. சுற்றுலா அமைச்சர் பிரசன்னா ரணதுங்க இனிமேல் கல்வி அமைச்சைப் பொறுப்பேற்பார்.
இன்று அல்லது இன்னும் சில நாட்களில் இம் மாற்றங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.