Spread the love

இலங்கையில் பிறக்கும் குடிமக்களின் பிறப்புச் சாட்சிப் பத்திரங்களில் இனிமேல் ‘இனமும்’ , ‘மதமும்’ குறிப்பிடப்பட மாட்டாது.

சகல பிறப்புச் சாட்சிப் பத்திரங்களும் ‘சிறிலங்கன்’ என்ற பதத்தை மட்டுமே கொண்டிருக்குமென பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் அறிவித்திருக்கிறது.

அத்தோடு, பெற்றோரது திருமணம் பற்றிய தகவல்களும் புதிய விண்ணப்பப் பத்திரத்திலிருந்து அகற்றப்படவிருக்கிறது. பெற்றோரின் திருமணம் பற்றிய தகவல்கள், பாடசாலைப் பதிவுகளின்போது பிள்ளைகளுக்கு பல இடைஞ்சல்களைக் கொடுத்துவருவதாகவும் அதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு எனவும் பதிவாளர் நாயகம் என்.சி.விதானகே தெரிவித்தார்.

புதிய பதிவுகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் செய்யப்படுமெனவும், அதற்கான செயற்பாடுகள் தயார்நிலையில் இருப்பினும், ஆகஸ்ட் 5 தேர்தல்களின் பின்ன்ரே அது நடைமுறைப்படுத்தப்படுமெனவும் பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் அறிவித்திருக்கிறது.

புதிய பிறப்புப் பதிவுச் சான்றிதழ், 12 இலக்கங்கங்களைக் கொண்ட தொடர் குறியீட்டெண்ணாக இருக்குமெனவும், அதில் சர்வதேச தரத்திற்கேற்ப, QR குறியீடு, Bar குறியீடு, பிரத்தியேக watermark ஆகியன இருக்குமெனவும், குழந்தை 15 வயதை எட்டும்போது அது தனது அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கலாம் எனவும் விதானகே தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Related:  இலங்கை பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் - ஆசனப் பங்கீடு