Sri Lanka

இலங்கையில் பாரதீய ஜனதா கட்சி என்னும் பெயரில் கட்சியொன்று பதிவு

கடந்த வாரம் வெளிவந்த செய்திகளை உறுதி செய்வதைப்போல், பாரதீய ஜனதா கட்சி என்ற பெயரில் இலங்கையில் உண்மையாகவே ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி விளக்கக் கூட்டத்தில் இக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவராகிய வீ.முத்துசாமி இதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தமிழ் மக்களின் கல்வி, விளையாட்டுத்துறைகளை மேம்படுத்துவதற்காக தாம் இதை ஆரம்பித்திருப்பதாகவும், இஇலங்கை அரசாங்கத்துடன் இணைந்தே தாம் பணியாற்றவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாடு தழுவிய ரீதியில் கிளைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதற்கும் இந்திய பா.ஜ.க. விற்கும் எந்தவித சமபந்தமுமில்லை எனவும் இது பற்றிய செய்தி கடந்த வாரம் வெளிவருவதற்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே தாம் இய் யோசனையை முன்வைத்திருந்ததாகவும், ஊடகவியலாளரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது முத்துசாமி கூறினார்.