Entertainment

இலங்கையில் நடிகர் பிரபுதேவா

பிரபல நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா அவர் நடிக்கும் முசாசி படத்தின் சில பாட்டுக்காட்சிகளின் படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ளார். சாம் றொட்றீகேஸ் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்திற்கான சில காட்சிகள் இலங்கையில் படமாக்கப்படவுள்ளன.

கொழும்பு ஷங்கிரி லா ஓட்டலில் தங்கியிருக்கும் பிரபுதேவா கடந்த வாரம் தனது ரசிகர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். கடந்த வாரம் இலங்கையின் சுற்றுலாத் திணைக்கள அதிகாரிகள் பொலிவூட் தயாரிப்பாளர்களைச் சந்தித்து தமது நாட்டின் பல்வகை இயற்கை, கலாச்சார வளங்களை வந்து பார்க்கும்படிகூறி ஆறு நாள் அழைப்பை விடுத்திருந்தனர். திரைப்படத் தயாரிப்பாளர்களினால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு கணிசமான வருமானம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் முசாசி சாம் றொட்றீகேஸ் இயக்கும் முதலாவது படமாகும்.