இலங்கையில் தொழிற்சாலை அமைக்க விரும்புகிறது சைனோஃபார்ம் நிறுவனம்


கோவிட் கட்டுப்பாடிற்காக இலங்கையில் பாவனையிலுள்ள சைனோஃபார்ம் தடுப்பூசியை வழங்கிவரும் சீன நிறுவநமான ‘சைனோஃபார்ம் குரூப்’ இலங்கையில் அதன் மீள்நிரப்பு நிலையமொன்றை (re-filling station) ஸ்தாபிக்க விருப்பம் கொண்டுள்ளதாக அதன் தலைவர் லூ ஜிங்ஷெந் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன்னா செப்டம்பர் 7 அன்று நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடியதாகவும், இதுவரை, தடையேதுமின்றி தடுப்பூசிகளை வழங்கிவருதலுக்காக, ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் தனிப்பட்ட நன்றிக் கடிதம் ஒன்றை அப்போது கொஹொன்னா சைனோஃபார்ம் குழிவினருக்கு வழங்கியதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

‘மீள் நிரப்பு நிலையத்தை’ ஸ்தாபிப்பதன் மூலம் இலங்கயில் மட்டுமல்லாது அப் பிராந்தியம் முழுவதற்கும் தமது வழங்கலை விஸ்தரிக்க முடியுமெனத் தான் நம்புவதாக சைனோஃபார்ம் நிறுவனத்தின் தலைவர் லூ ஜிங்ஷெங் தெரிவித்துள்ளார்.

சைனோஃபார்ம் தடுப்பூசியைத் தற்போது 100 நாடுகளுக்கு மேல் பாவித்து வருகின்றன் எனவும் இதுவரை 50 நாடுகளின் அதிபர்கள் இத் தடுப்பூசியை எடுத்துள்ளதாகவும் இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை எனவும் ஜிங்ஷெங் மேலும் தெரிவித்துள்ளார்.