NewsSri LankaUS & Canada

இலங்கையில் சமூகவலைத்தளங்களில் வெளியாகும் கனடிய குடிவரவு விளம்பரங்களை நம்பவேண்டாம் – கனடிய தூதரகம் எச்சரிக்கை!

‘கனடிய அரசாங்கத்தின் 2022 ஆண்டுக்கான குடிவரவாளர் ஆட்சேர்ப்பு’ (Government of Canada recruitment campaign 2022) என்ற தலைப்பில் இலங்கையில் சமூகவலைத்தளங்களில் வெளியாகும் பொய் விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்கும்படி இலங்கையிலுள்ள கனடிய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“உடனடியாக வேலை வாய்ப்பு அனுமதி பெற்றுத்தரப்படும்” என்ற உறுதிமொழியுடன் வெளியாகும் இவ் விளம்பரங்கள் குறித்து விழிப்பாக இருக்கும்படி கனடிய தூதரகத்தால் வெளியிடப்பட்ட ருவிட்டர் செய்தி குறிப்பிடுகின்றது.