இலங்கையின் மோசமாகும் பொருளாதார நிலைமை குறித்து கனடிய அரசு இலங்கையிலுள்ள தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் தங்கியிருக்கும், அங்கு பயணம் செய்யும் கனடியர்களுக்கு கனடிய அரசு பகிரங்க எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இலங்கையில் மோசமாகிவரும் பொருளாதார நிலை குறித்து அங்கு வாழும் மற்றும் அங்கு பயணம் செய்துவரும் கனடிய குடிமக்களுக்கு விடுத்த ‘பயண எச்சரிக்கையில்’ அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் வழங்கப்படும் பொதுச் சேவைகளில் குறைபாடுகள் ஆகியன பற்றி எச்சரித்துள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதாரவும் காரணமாக அத்தியாவசிஅய் பொருட்களுக்கான தட்டுப்பாடு மேலும் மோசமடைவதற்கான சாத்தியங்கள் உள்ளன எனவும் அங்கு வாழும் கனடியர்கள் மருந்து, உணவு, குடி நீர், எரிவாயு போன்றவற்றைப் போதுமான அளவு சேமித்து வைத்துக்கொள்ளும்படியும், உள்ளூர் ஊடகங்களை மிகவும் கவனமாக அவதானித்து தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும்படியும் இவ்வெச்சரிக்கை தெரிவிக்கிறது.

அத்தியாவசிய பொருட்களைப் பெறுவதில் தடங்கல்கள் ஏற்படச் சாத்தியங்கள் உண்டு எனவும், பலசரக்குக் கடைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மருந்தகங்கள் ஆகியவற்றில் பண்டங்களைப் பெற நீண்ட வரிசைகளில் நெடுநேரம் நிற்கவேண்டி ஏற்படலாமெனவும் இவ்வெச்சரிக்கை தெரிவிக்கிறது.