இலங்கையின் உள்நாட்டு மீன்பிடித் தொழிலுக்கு கனடா உதவி | தூதுவர்

Spread the love

ஜனவரி 23, 2020

மீன்பிடி, நீர்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கையின் உள்நாட்டு நந்நீர் மீன்பிடித் துறையை வளர்த்தெடுப்பதற்கு கனடிய அரசு உதவி செய்ய முன்வந்துள்ளதாக இலங்கையின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

கனடிய தூதுவர் டேவிட் மக்கின்னனுக்கும் இலங்கையின் மீன்பிடி, நீர்வளத் துறைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இம் முடிவு எட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் மீன்பிடித் துறைக்கு கனடிய அரசு ஏற்கெனெவே வழங்கி வரும் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் குறித்து அமைச்சர் தேவானந்தா கனடிய அரசுக்கு நன்றியைத் தெரிவித்தார்.

அத்துடன், வட மாகாணத்தில் பெண்களின் சுய தொழில் முயற்சிகள் மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு கனடிய அரசு ஆற்றிவரும் உதவிகளையும் அமைச்சர் வரவேற்றதோடு தன் நன்றியையும் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள மீணவ சமூகத்தின் வாழ்வை மேம்படுத்துவதற்காகக் கனடா தொடர்ந்து தன் உதவிகளைச் செய்யுமென தூதுவர் மக்கின்னன் உறுதியளித்துள்ளார்

Print Friendly, PDF & Email
Related:  மிருசுவில் படுகொலை சுனில் ரத்நாயக்காவுக்கு ஜனாதிபதி விசேட மன்னிப்பு

Leave a Reply

>/center>