News & AnalysisSri Lanka

இலங்கைக் கொடி விவகாரம் | அமசோன் விளம்பரத்தை நீக்கியது!

இலங்கைக் கொடி பொறித்த மிதி விரிப்பு விளம்பரத்தை அமசோன் நீக்கியது

இலங்கையின் தேசியக் கொடி பொறிக்கப்பட்ட மிதி விரிப்புகள் அமசோன் இணையத்தளத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கையின் பயனாக அமசோன் அவ் விளம்பரத்தை நீக்கியிருக்கிறது என சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்திருக்கிறது.

அதே வேளை இம் மிதி விரிப்புக்களையோ அல்லது இலங்கைக் கொடியை அவமதிக்கும் எந்தப் பொருட்களையோ தயாரிப்பதை நிறுத்தும்படியும் கோரி சீனாவின் வெளிவிவகார அமைச்சுக்கு இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக் கொடியை அவமதிக்கும் எந்தப் பொருட்களையும் விற்பதை உடனே நிறுத்தும்படி அவற்றை விற்பனை செய்த நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பப்படிருக்கிறது எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இவ் விடயத்தைத் தாம் கண்காணித்து வருவதாகவும் சீனாவில் இப்படியான பொருட்கள் தயாரிக்கப்படுவதோ அல்லது விற்பனை செய்யப்படுவதோ தெரிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அது தெரிவித்துள்ளது.