இலங்கைக் கொடி பொறித்த மிதி விரிப்புகள் (floor mats) அமசோனில் விற்கப்படுவதாகவும் இது குறித்த விளம்பரங்கள் பற்றிய தகவல்களை அறிய இலங்கை வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
அமசோன் விற்பனைத் தளத்தில் US$ 12.00 டொலருக்கு விற்கப்படும் இம் மிதி விரிப்பு இலங்கையின் நட்பு நாடான சீனாவில் தயாரிக்கப்படுகிறது என்பதே ஆச்சரியத்துக்குரிய விடயம். சிங்கப்பூரிலுள்ள ஒரு நிறுவனம் இதன் விநியோகத்தைச் செய்கிறது. ஒரு விரிப்பை அனுப்புவதற்கு அது US$ 9.02 அறவிடுகிறது.
இவ் விரிப்புகள் இலங்கையில் விநியோகிக்கப்பட்டால் தாம் சட்ட நடவடிக்கை எடுப்போமென நுகர்வோர் விவகார நிர்வாகத்தின் தலைவர் மேஜர் ஜெனெரல் சாந்தா திசநாயக்கா தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கும் இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
அதே வேளை, ஒரு நாட்டின் தேயக் கொடியைப் பொறித்து தரைக்கபளம், மிதி விரிப்புகள் தயாரிப்பது சட்டத்துக்கு விரோதமானது என வெளி விவகார அமைச்சின் செயலாளர் கே.ஜே.தர்மதிலகா தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருக்கும் இவ் விரிப்புக்ளைன் தயாரிப்பாளரைத் தொடர்புகொள்ள பெஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்புகொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.