இலங்கைக்கு சீனா, மேலும் US$ 140 மில்லியன் கடனுதவி!

இலங்கைக்கு சீனா, மேலும் US$ 140 மில்லியன் கடனுதவி!

Spread the love

US$ 70 மில்லியன் இந்த மாத இறுதிக்குள் கிடைக்கும்

கொழும்பு ஜூன் 18, 2020: இலங்கைக்கு மேலும் 140 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடனாக வழங்க சீனா முன்வந்துள்ளது. சீன அபிவிருத்தி வங்கி (China Development Bank) வழங்கும் இக் கடனில் முதல் 70 மில்லியனையும் இந்த மாத் இறுதிக்குள்ளும், மீதியை இந்த வருட இறுதிக்குள்ளும் வழங்க அது இணங்கியுள்ளது. தற்போது நாடு எதிர்நோக்கும் உடனடி பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க இது உதவியாகவிருக்கும் என சீன தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மே மாதம் 13ம் திகதி, ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கும் சீன அதிபர் சி ஜிங்பிங்கிற்கும் இடையில் நடைபெற்ற உரையாடலின் தொடர்ச்சியாக, சீனாவின் பிரதித் தூதுவர் ஹூ வே, நேற்று மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு பற்றியும் பேசியிருந்தார்.கோவிட்-19 நோய்த்தொற்றைத் தடுப்பது பற்றியே இப் பேச்சுவார்த்தை மையம் கொண்டிருந்தாலும், நிதி மற்றும் வர்த்தக முதலீடுகளை மேம்படுத்துவது பற்றியும் தாம் பேசியிருந்ததாக, தூதரகப் பேச்சாளர் டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்திருந்ததாக அது செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு US$ 500 மில்லியன் கடனை வழங்குவதென உறுதியளித்திருந்தது. தற்போது வழங்கும் கழிவு வட்டி வீதத்தில் கொடுக்கப்படுமென எத்ரிபார்க்கப்படுகிறது.

இவற்றை விட, அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் போன்றவற்றில் சீனாவின் முதலீடுகள் பற்றியும் பேசப்பட்டதாகவும், 500 மில்லியன் டாலர்கள் செலவில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களுக்கான டயர்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை சீனாவின் முதலீடுகள் மூலம் நிறுவவுள்ளதாகவும், தூதரகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email