இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக, ஜூலி (ச்)சங், ஜனாதிபதி பைடனால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அமெரிக்க வெளிவிவகார சேவை அதிகாரியான ஜூலி (ச்)சங், தற்போதய தூதுவர் அலானா ரெப்ளிட்ஸை மாற்றீடு செய்கிறார்.
தற்போது அவர், ராஜாங்கத்த் திணைக்களத்தின், மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான பிரதி, உதவிச் செயலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
தென் கொரியாவில் பிறந்த (ச்)சங், 5 வயதாகவிருக்கும்போது அமஎரிக்காவுக்குத் தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்திருந்தார். கொரிய, யப்பானிய, கெமர், தாய், ஸ்பானிஷ் மொழிகளைப் பேசக்கூடிய அவர் கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.