IndiaSri Lanka

இலங்கைக்கான இந்திய நிதி உதவிக்கு வை.கோ. கண்டனம்

நவமபர் 30, 2019

இந்திய மத்திய அரசு இலங்கைக்கு ரூ. 2800 கோடியை அபிவிருத்திக்காகவும், ரூ.350 கோடியை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காகவும் கொடுக்கவிருப்பதாக வந்த செய்தியை ம.தி.மு.க தலைவர் வை.கோபால்சாமி மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக அறிவித்திருக்கிறார்.

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் பத்திரிகையாளரிடம் பேசும்போது, இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கும், தமிழ்ப் பெண்கள் துன்புறுத்தப்படுவதற்கும் காரணமாகவிருந்த கோதாபய ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

“கோதாபய ராஜபக்ச அரசாங்கத்துடன் உறவைப் பேணுவதற்காக பிரதமர் மோடியின் அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளைத் தியாகம் செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியைத் தருகிறது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.