Spread the love

ரிஷி கபூர், இர்ஃபான் கான் | மின்னி மறைந்த நட்சத்திரங்கள்


‘Slumdog Millionaire’, ‘The Life of Pi’ போன்ற படங்களின் மூலம் வெளியுலகில் பிரகாசித்த இந்திய வெள்ளித்திரை நட்சத்திரம் இர்ஃபான் கான், மற்றும் ‘மேரே நாம் ஜோக்கர்’ மூலம் அறிமுகமாகி ‘பொபி’ மூலம் பிரகாசித்த ரிஷி கபூர் ஆகியோர் இவ்வாரம் இவ்வுலகை விட்டு நிரந்தரமாக நீங்கி விட்டார்கள்.

ரிஷி கபூர்

மறைந்த பிரபல இந்தி நட்சத்திரம் ராஜ் கபூரின் மகனான இவர் தந்தையார் தயாரித்த ‘மேரே நாம் ஜோக்கர் (1970)’ மூலம் திரைக்கு அறிமுகமானார். பின்னர் டிம்பிள் கபாடியாவுடன் நடித்த ‘பொபி’ படம் மூலம் அவர் இளைய தலைமுறையின் காதல் நாயகனாகிவிட்டார். இப் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக 1974 இல் ஃபிலிம் ஃபெயர் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. தனது வாழ்காலத்தில் 92 படங்களை நடித்து முடித்துவிட்டு, ஏப்ரல் 30, 2020 (இன்று) புற்றுநோய் காரணமாக, தனது 67 வது வயதில் மரணமானார்.

இர்ஃபான் கான்

சிறந்த கிரிக்கெட் நட்சத்திரமாக வந்திருக்க வேண்டிய ஒருவர் வசதியின்மை காரணமாக விதிவசம் சிக்கிச் சிறந்த நடிகராக ஆகியிருந்தார். மேடை நாடகங்கள் மூலம் நடிப்புத் துறைக்குள் வந்து சுய முயற்சியின் மூலம் திறமையை மூலதனமாக வைத்து முன்னுக்கு வந்தவர்.

இர்ஃபானின் திறமை பொலிவூட் திரைகளைவிட, ஹொலிவூட் திரைகளிலேயே அதிகம் பிரகாசித்தது. இவரது முதல் ஆங்கிலப்படம், அசிஃப் கபாடியாவின் ‘The Warrior’ (2001). மீரா நாயரின் ‘The Namesake’ (2006) மூலம் ஹொலிவூட்டில் காலடி எடுத்து வைத்த அவர், ‘A Mighty Heart’, ‘Slumdog Millionaire’ , The Life of Pi’ போன்ற படங்கள் மூலம் வெளியுலகில் புகழப்படும் ஒரு ‘இந்திய’ நடிகரானார்.

1993 இல் ‘Jurassic Park’ திரப்படம் வெளியானபோது ‘அப்படத்துக்கு டிக்கட் வாங்கப் பணம் இருக்கவில்லை’ என்றிருந்த ஒருவர் பின்னர் ‘Jurassic World’ படத்தை விளம்பரப்படுத்துவதற்கு அழைக்கப்பட்டார் எனின் அவரது வளர்ச்சிக்கு அவரே பொறுப்பு.

இந்திக்கு வெளியே பாரிய வெற்றிகளைக் கண்டிருந்தாலும் பொலிவூட்டில் மிகப் பெரிய நட்சத்திரமாக இருப்பது பற்றிய கனவு அவரை அரித்துக்கொண்டே இருந்தது. 22 வருட திரை வாழ்வில் அவர் இந்தி நடிகராகப் பிரகாசிக்க முடியவில்லை எனினும், இந்திய நடிகராகப் பிரகாசித்திருக்கிறார். புற்றுநோயுடன் போராடிய இரண்டு வருடங்களிலும் அவர் தனது இறுதிப்படமாக, இந்தி மொழியிலான ‘Angrezi Medium (2020) முடித்துக்கொடுத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்.

Irrfan Khan: India's 'most versatile' actor dies at 53
Video captionIrrfan Khan: India’s ‘most versatile’ actor dies at 53
Related:  பார்செலோனா | 2,292 தாவரங்கள் கேட்டு மகிழ்ந்த இசை நிகழ்ச்சி
Print Friendly, PDF & Email