இராணுவ ஆட்சிக்குள்ளாகும் இலங்கை - மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை! -

இராணுவ ஆட்சிக்குள்ளாகும் இலங்கை – மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை!

Spread the love

ஜனவரி 13, 2020

“கோதாபய ராஜபக்ச தலைமையில் இயங்கும் அரசாங்கம், அதை விமர்சிப்பவர்களையும், மனித உரிமை காப்பாளர்களையும் அடக்குவதன் மூலம் இலங்கையை இராணுவமயப்படுத்தும் திட்டத்துடன் செயற்படுகிறது” என இரு மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

பாஷன அபயவர்த்தன – ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு

அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு (International Truthu and Justice Project (ITJP)), மற்றும் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு (Journalists for Democracy in Sri lanka (JDS)) ஆகியன இக்குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றன.

தேர்தலுக்கு முன்னரும் பின்னரும், ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் காப்பாளர்கள், சட்டத்தரணிகள், வாதிகள், கல்வியாளர்கள், எதிர்த் தரப்பினர் என்பவர்களை மிரட்டியதும், அச்சுறுத்தியதுமான 69 சம்பவங்கள் அங்கு நடைபெற்றிருக்கின்றனவென்றும், அவற்றில் கொடூரமாகப் பாதிக்கப்பட்ட சிலர் நாட்டை விட்டே ஓடவேண்டியேற்பட்டிருக்கிறது என்றும் இவ்வமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ஜஸ்மின் சூக்கா – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு

“பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்கான முயற்சிகளை அறவே ஒழிக்கவும், அதிகரிக்கப்பட்ட நவீனமயப்படுத்தப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம் சுதந்திரமான நடமாட்டத்திக்கான வெளியை வெகுவாகச் சுருக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாம் அவதானிக்கிறோம்” என அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூகா அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்னர் சர்வதேச சமூகம் இலங்கைக்குக் கொடுத்துவரும் பாதுகாப்பு உதவியை, மனித உரிமை அமைப்புகளையும், ஊடகவியலாளர்களையும் அடக்கி ஒடுக்குவதில் இலங்கை பாவிக்காது என்பதி சர்வதேச சமூகம் உறுதிசெய்ய வேண்டும்” என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“முன்னாள் இராணுவ அதிகாரிகளை அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் அமர்த்தியதன் மூலம் கோதாபய ராஜபக்ச நாடு முழுவதையும் இராணுவ ஆட்சிக்குள் கொண்டுவந்திருக்கிறார். முன்னர் மேற்கொள்ளப்பட்ட, மோசடியுட்பட்ட, குற்றச்செயல்களை விசாரண செய்தவர்கள் பதிகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்கள். முன்னர் ஊழல் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டவர்கள், போர்க்குற்றம் புரிந்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்டவர்கள் இப்போது முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். இது மனித உரிமைகளுக்காகக் குரலெழுப்பும் ஊடகவியலாளர்களினதும், தொழிற்சங்கவாதிகளினதும், மனித உரிமை செயற்பாட்டாளர்களினதும் குரல்களை அடக்கியிருக்கிறது” என இலங்கையில் னநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பைச் சேர்ந்த பாஷனா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  'சப்பிரி கமாக்' திட்டத்தின் கீழ் கிராமிய அபிவிருத்திக்காக 28 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *