Healthகேள்வி-பதில்

இரத்த அழுத்த அளவீடு | இரண்டு இலக்கங்களும் எதை வெளிப்படுத்துகின்றன?

மருத்துவரிடம் போகும்போது அவர் எமது கைகளில் அமுக்கமானியை (இரத்த அழுத்தக் கருவியைச்) சுற்றி இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கிறார். உங்கள் மருத்துவர் வாயைத் திறப்பவராக இருந்தால் “பறுவாயில்லை, 120 /80. Keep it up” என ஒரு புன்முறுவலுடன் மற்ற அலுவல்களைப் பார்ப்பார். சில்வேளைகளில் இவ்விலக்கங்கள் 170/70 போன்ற அளவுகளைக் காட்டினால் அவர் மேலும் ஓரிரு தடவைகள் அமுக்கத்தைப் பரிசோதித்துவிட்டு தொடர்ந்தும் அவை உயர் எண்களில் அல்லது தாழ் எண்களில் இருந்தால் அதற்கான சிகிச்சைகளை ஆரம்பிப்பார். பலருக்கு இவ்விலக்கங்கள் எதைக் குறிக்கின்றன என்ற விளக்கம் இருப்பதில்லை. அது தேவையில்லை என நினைப்பவர்களும் உண்டு.

இருதயம் நான்கு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலுள்ள இரு சிற்றறைகளும் இரத்தத்தை உள்ளெடுப்பவை. கீழுள்ள இரண்டு பெரிய அறைகளும் இரத்தத்தை வெளியே அனுப்புபவை. இவை அனைத்தும் ஒவ்வொரு பம்புகள் போலச் செயற்படுகின்றன. இவற்றில் இடது கீழறை (left ventricle) ஒக்சிசன் செறிவான இரத்தத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் கொண்டு செல்வற்கென தனது தசைகளைச் சுருக்கி அழுத்தத்தை வெளிப்படுத்துகிறது. இந்த அழுத்தம் உடம்பின் நாடிகள் அனைத்திலும் பிரதிபலிக்கும். மருத்துவரின் அமுக்கமானி கைகளிலுள்ள நாடிகளில் இவ்வழுத்தத்தை அளந்து சொல்லும். இவ்வழுத்தத்தை ஆங்கிலத்தில் systolic pressure என அழைப்பர் இதுவே முதலாவது எண் (120).

இடது கீழறை இரத்தத்தை வெளியே அனுப்புவதற்காக அழுத்தத்துடன் சுருந்கிய பின்னர் அது மீண்டும் தனது பழைய நிலைக்குத் திரும்பிவிடவேண்டும். அடுத்த துடிப்பிற்குத் தயாராகுவதற்கு முதல் அது தளர்வு நிலைக்குத் திரும்பிவிடும். இந்த நேரத்தில் நாடிகள் அனைத்தும் அழுத்தமற்ற நிலையில் தளர்வு நிலையில் இருக்கும். இந்த அழுத்தத்தின் அளவே இரண்டாவது எண் (80). இதை dystolic pressure என அழைப்பார்கள்.

இவை இரண்டும் தொடர்ச்சியாக வேறு இலக்கங்களைக் காட்டினால் உங்கள் மருத்துவர் உரிய சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.

சில வேளைகளில் சிலர் ஏதோ காரணங்களையிட்டுப் பதட்ட நிலையில் இருக்கும்போது இவ்விலக்கங்கள் மாறுபடுவது வழக்கம். மருத்துவரது அலுவலகத்தில் கால்பதித்தவுடனேயே சிலருக்கு அழுத்தம் அதிகரித்துவிடும். எனவே தான் மருத்துவர் உங்களோடு பேச்சுக்கொடுத்து உங்களை ஆசுவாசப்படுத்தி இரத்த அழுத்தத்தை அளவிடுகிறார். (Photo by Mockup Graphics on Unsplash)