‘இரண்டு வெள்ளை வான் சாரதிகளும்’ கைது!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தினவின் ஊடக மாநாட்டில் வாக்குமூலம் கொடுத்தது காரணம்?

டிசம்பர் 14, 2019

வெள்ளை வான் சாரதிகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன ஒழுங்கு செய்திருந்த ஊடக சந்திப்பின்போது வாகுமூலமளித்த இருவரைக் குற்ற விசாரணைப் பிரிவு கைதுசெய்துள்ளது.

‘சிங்கள ஜாதிக சன்விதானய’ அமைப்பு கொடுத்த புகாரை அடுத்து அவர்கள் மஹரகம பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனத் தெரியவருகிறது.