இரண்டாவது காலாண்டில் 3.5 மில்லியன் பேர் வேலைகளை இழக்கலாம் – பாங்க் ஒஃப் அமெரிக்கா

Spread the love

மார்ச் 20, 2020

  • ஏனைய நாடுகளைப் போல அமெரிக்க பொருளாதாரமும் மந்தநிலையை எய்திவிட்டது என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக பாங்க் ஒஃப் அமெரிக்கா அறிவித்துள்ளது.
  • வேலைகள் இழக்கப்படுவதும், சொத்துக்கள் அழிக்கப்படுவதும், நம்பிக்கை தளர்த்தப்படுவதும் தவிர்க்கமுடியாமல் போகலாம்.
  • அமெரிக்காவில் இரண்டாவது காலாண்டில் 3.5 மில்லியன் பேர் வேலைகளை இழக்கலாம்.

கொரோனாவைரஸ் தாக்கத்தினால் திணிக்கப்பட்ட பொருளாதார மந்தநிலையை இனிமேலும் நாம் தவிர்க்க முடியாது என முதலீட்டாளர்களுக்கு பாங்க் ஒஃப் அமெரிக்கா அறிவித்துள்ளது.

“ஏனைய நாடுகளைப் போல நாமும் பொருளாதார மந்தநிலைக்குள் (recession) சென்றுவிட்டோம் என்பதை உத்தியோகபூர்வமாக நாம் அறிவித்துக்கொள்கிறோம். வேலைகள் இழக்கப்படுவதும், செல்வம் அழிக்கப்படுவதும் தவிர்க்கப்பட முடியாதவை” என அவ் வங்கியின் முதன்மை பொருளியல் நிபுணர் மிஷேல் மெயெர் அறிவித்துள்ளார்.

2020 இன் இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் 12% த்தால் குறைவதோடு, 2020 இற்கான GDP 0.8% சுருக்கமடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேலையற்றோர் எண்ணிக்கை இரட்டிப்பாவதும், இரண்டாம் காலாண்டில், மாதமொன்றுக்கு ஏறத்தாழ 1 மில்லியன் வீதம் மொத்தம் 3.5 மில்லியன் பேர் வேலைகளை இழக்கலாமெனவும், இது மிகவும் அதிர்ச்சியைத் தரும் பொருளாதார விழ்ச்சியாக இருக்குமெனெவும் அவ் வங்கி தெரிவித்துள்ளது.



கொரோனாவைரஸ் தொற்று ஏற்கெனவே உலக பொருளாதாரத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. வியாபாரிகள் தங்கள் கடைகளை மூடிக்கொண்டு வருகிறார்கள். பயணங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஒரு மாதத்துக்கு முன்னர் உச்ச நிலையிலிருந்த சந்தை நிலவரம் இப்போது அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது.

“நிலைமை மேலும் மோசமடைவதற்கான அறிகுறிகளே தெரிகின்றன. ஜூலை மாதமளவில் நிலைமை பழைய நிலைமைக்கு வரலாம் என் எதிர்பார்க்கிறோம். வீழ்ச்சி பாரதூரமாக இருந்தாலும் அது குறுகிய காலத்துக்கே இருக்கும்” என மெயெர் தெரிவித்துள்ளார்.

2008 இல் நடைபெற்றது போல, அரசாங்கம் தலையிட்டுத் தனது பணத்தை வாரியிறைத்து நட்டமடைந்த நிறுவனங்களை மீட்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிலும் கனடாவிலும் இதே நிலைமைதான். அதனால் தான் இழக்கப்பட்ட வேலைகளை மீட்டுக்கொண்டுவர முடியும். “அரசாங்கத்தின் இம் மீட்சி முயற்சிகள் கட்டுப்பாடற்ற முறையில் இருக்க வேண்டும்” என மெயெர் கூறுகிறார்.


Print Friendly, PDF & Email
Related:  கொறோனாவைரஸ்: சரியும் உலகப் பொருளாதாரம்!

Leave a Reply

>/center>