Sri Lanka

இரணைதீவில் புதைக்கும் எண்ணத்தை அரசு கைவிட்டது

கோவிட் நோயினால் மரணமடைந்தவர்களின் உடல்களை இரணைதீவில் புதைக்குன் எண்ணத்தை அரசு கைவிட்டுள்ளது

கோவிட் தொற்றினால் மரணமடைந்தவர்களின் உடல்களை இரணதீவில் புதைக்கும் எண்ணத்தை அரசாங்கம் தற்போது கைவிட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைதீவில் கோவிட்டினால் மரணமடைந்தவர்களைப் புதைக்க வேண்டாமெனத் தான் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்கள் அதற்கு இணங்கியுள்ளார்களென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரணைதீவிற்குப் பதிலாக இறந்த முஸ்லிம்களின் உடல்களைப் புதைப்பதற்கு ஒட்டமாவடியிலுள்ள சூடுபத்தினசேனை என்னுமிடம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

இரணைதீவில் மீளக்குட்யமர்த்தப்பட்ட 165 குடும்பங்களும் தெரிவித்த எதிர்ப்பினையடுத்து அரசாங்கம் இம் முடிவினை எடுத்துள்ளது எனத் தெரியவருகிறது.