‘இயல்பு வாழ்வை வாழ என்னை விட்டுவிடுங்கள்’ – தமிழ் ஊடகவியலாளர் அரசாங்கத்துக்குக் கடிதம்

கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளரும், யாழ் பல்கலைக் கழக மாணவருமான பி. சுஜீவன் அவர்களுக்கு கடந்த ஜூன் மாதத்திலிருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவு தொடர்ந்தும் தொந்தரவு கொடுத்து வருகிறது.

கிளீநொச்சியிலுள்ள அவரது குடும்பத்தினரிடம் அடிக்கடி சென்று சுஜீவனை விசாரணைக்கென அழைக்கும் அழைப்பாணைகளைக் கொடுப்பதன் மூலம் தொடர்பான நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது என முறைப்பாடு செய்யப்படிருக்கிறது. இறுதியாகக் கொடுக்கப்பட்ட அழைப்பாணையின் பிரகாரம் டிசமப்ர் 17 அவர் இவ்விசாரணைப் பிரிவிற்குச் சமூகமளிக்க வேண்டும்.

கடந்த நாலரை ஆண்டுகளாக ஊடகவியலாளராகப் பணியாற்றிவரும் சுஜீவன் அவர்கள் எழுதிய குறிப்புகள் மற்ரும் சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாக சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் சுஜீவன் பயங்கரவாதத்தைத் தூண்டும் வகையில் எழுதுகிறார் என்று பொலிசில் செய்த முறைப்பாட்டின் காரணமாகவே பயங்கரவாத விசாரணைப் பிரிவு இவ்விசாரணைகளை மேற்கொள்கிறது என சுஜீவன் தெரிவித்திருக்கிறார்.



“பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் என்னைக் கைதுசெய்யும்படி அவர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனால் தொடர்ந்தும் அச்சமுற்ற நிலையில் மனத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளேன்” என சுஜீவன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாததம் முதல் சுஜீவன் பற்றிய விடயங்களைப் பெறுவதற்காக கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்களிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு விச்சரணைகளை மேற்கொண்டு வருகிறது. ஜூலை 5 இல், பயங்கரவாதத்தைத் தூண்டுகிறார் என்ற குற்றச்சாட்டில் சுஜீவன் இரண்டு மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். “பொதுவாக அவரது குடும்ப உறுப்பினரக்ள பற்றி விசாரித்தார்கள் எனவும், ‘குடும்பம் என்ன செய்கிறது?, உனது சகோதரர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தார்களா” என அவர்கள் விசாரித்திருந்ததாக சுஜீவன் தெரிவித்திருந்தார்.

இப்படிப் பல வாரங்கள் தொடர்ச்சியான விசாரணைகளி எதிர்கொண்ட சுஜீவன் இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு கடிதமொன்றை எழுதியிருந்தார். அதில் அவர் ” என்னால் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ முடியவில்லை. தயவு செய்து எனது இயல்பு வாழ்வை வாழ அனுமதியுங்கள்” எனக் கேட்டிருக்கிறார். (மூலம்: Srilanka Brief)