இயந்திரமனிதன் இயக்கிய ரஷ்ய விண்கலம் சர்வதேச விண்தளத்துடன் இணைய முயற்சி

Spread the love

ரஷ்யாவினால் ஏவப்பட்ட, முதன் முதலாக இயந்திர மனிதனால் (robot) இயக்கப்பட்ட, விண்கலம் சர்வதேச விண்தளத்துடன் (International Space Station) இணைய முடியவில்லை என ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

‘பெடோர்’ (Final Experimental Demonstration Object Research -FEDOR)) என அழைக்கப்படும் இந்த ‘றோபோட்’, இரண்டு வாரப் பணியில், சர்வதேச விண்தளத்திலுள்ள மனிதர்களுக்கு உதவிசெய்வதற்காக ‘சோயுஸ்’ (Soyuz) ஏவுகணையில் வைத்து அனுப்பப்பட்டது.

நேற்று அதிகாலை இந்த ஏவுகணை விண்தளத்தை அடைவதாக இருந்தது ஆனால் ‘இன்ரெர்பாக்ஸ்’ (Interfax) என அழைக்கப்படும் தானியங்கி இணைப்புச் செயலியில் ( automatic docking system) திடீரென்று ஏற்பட்ட கோளாறு காரணமாக இணைப்பு முயற்சி கைவிடப்பட்டது.

FEDOR எனப்படும் ரஷ்ய றோபோட்

விண்கலம் தற்போது விண்தளத்திலிருந்து 96 மீட்டர் தூரத்தில் நிற்கிறது. இன்று காலை அதை மீண்டும் இணைப்பதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபடுவர் என ரஷ்ய கட்டுப்பாட்டு மையம் கூறியிருக்கிறது.

சர்வதேச விண்தளம்

‘ஸ்கைபோட் F-850’ எனப் பெயரிடப்பட்ட இந்த இயந்திர மனிதன் (humanoid) நிஜ மனிதனுக்குப் பதிலாக ரஷ்யாவால் அனுப்பபட்ட முதல் றோபோட் ஆகும். நிஜமான மனித உருவத்தையுடைய இந்த றோபோட் மனித உடலின் அசைவுகள் அனைத்தையும் செய்யக்கூடியது.

இணைப்புக்கான ஏவல் கட்டளையைப் பிறப்பிக்கும்போது ” போகலாம் வாருங்கள், போகலாம் வார்ங்கள்” என்று அந்த றோபோட் குரலெழுப்பியது. ரஷ்யரான யூரி ககாரின் முதன் முதலில் விண்வெளிக்குப் புறப்படும்போது அவர் கூறிய பிரபல வார்த்தைகள் தான் அவை.

2017 இல் ரஷ்யாவின் உதவிப் பிரதமர் டிமிட்றி றோகோசின் இந்த றோபோட் துப்பாக்கிகளைப் பாவித்து இலக்குகளை மிகவும் துல்லியமாகச் சுட்டுத் தள்ளிய காணொளிக் காட்சிகளப் பகிர்ந்திருந்தார்.

அமெரிக்காவின் ‘நாசா’ தன்னுடைய இயந்திர மனிதனான ‘றோபோனோட் 2’ (Robonaut 2) என்ற றோபோட்டை ‘அபாயகரமான சூழலில் பணி புரியும்’ தேவைகளுக்காக 2011இல் விண்வெளிக்கு ஏவியிருந்தது.

சர்வதேச விண்தளம் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியாகும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>