Spread the love

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணயம் கூடுகின்ற பொழுது சிறீலங்கா, தென் சூடான், சிரியா ஆகிய நாடுகளின் மீதான தீர்மானங்களை முன்வைத்த பிரேரணைகளை பிரித்தானியா முன்னெடுக்கும் என அந்நாட்டின் ஐ.நாவுக்கான குழு உறுதி செய்திருக்கிறது. இது பற்றி அக்குழு விடுத்த அறிக்கை பின்வருமாறு:

“சிறீலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் தொடர்பான தீர்மானமொன்றை முதன்மைக் குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளான கனடா, ஜேர்மனி, மகெடோனியா, மொண்டினீக்றோ ஆக்யவற்றுடன் பிரித்தானியாவும் இணைந்து ஐ.நா. சபையில் முன்னெடுக்கவிருக்கின்றன. ஐ.நா. சபையில் 2015ம் ஆண்டு நிறைவேறறப்பட்ட தீர்மானம் 30/1 இல் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை சிறீலங்கா அமுற்படுத்துவதற்கான உதவிகளையும் ஒத்துழைப்பையும் கொடுத்து அந்நாட்டுடன் இக்குழு தொடர்ந்தும் இணைந்து செயற்படும்.

இது தொடர்பான வரைவு ஒரு ஒரு நடைமுறை சம்பந்தமானது என்ற வகையில் 2015 ஐ.நா. ஆணையத்தினால் உருவாக்கப்பட்ட செயல்முறையை மேலும் விரிவுபடுத்த வேண்டி இருக்கிறது. ஆணையத்தின் நியம பயிற்சி முறைகளுக்கிணங்க நாங்கள் சம்பிரதாயமற்ற பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வோம். இதற்கான முழு ஆதரவையும் ஆணையம் தரும் எனவும் நம்புகிறோம்.

இரண்டாவதாக, தென் சூடான் மீதான மனித உரிமைகள் ஆணையத்தின் கடப்பாட்டை மீள் நிறுவும் வண்ணம் இக் குழு மீண்டும் ஒரு தீர்மானத்தை ஐ.நா. சபையில் முன் வைக்கும். தெஹ்ன் சூடான் அரசும் இதர பங்காளிகளும் இவ் விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம்.

மூன்றாவதாக, சிரியா விடயத்தில் அதன் முதன்மை நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜோர்டான், குவெயித், மொறோக்கோ, நெதெர்லாந்து, கட்டார், துருக்கி மற்றும் ஐக்கிய ராச்சியம் ஆகிய நாடுகள் சிரியாவில் தற்போதுள்ள மனித உரிமைகள் நிலைமை பற்றிய தீர்மானமொன்றையும் முன்வைக்கும். சிரியாவில் மிக மோசமாக நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆணையத்தின் விசாரணைக் குழுவிற்கு வழங்கப்பட்ட ஆணையைப் புதுப்பிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்படும். இவ் விடயத்தில் ஆணயத்தின் பல அங்கத்தவர்களும் ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இறுதியாக, கடந்த வாரம் நாம் வெற்றிகரமாக மேற்கொண்ட பக்க நிகழ்வின் போது, குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் நீதி வழங்கும் விடயத்தில் இதில் சம்பந்தப்பட்ட முதன்மைக் குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளான எதியோப்பியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, மொறோக்கோ மற்றும் ஐக்கிய ராச்சியம் ஆகியன இணந்து ஒரு அறிக்கையை வெளியிட உத்தேசித்துள்ளோம்.

அத்தோடு, சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இன்னுமொரு பக்க நிகழ்வொன்றையும் ஒழுங்கு செய்யவுள்ளோம். ஐ.நா சினிமா (அறை இல். 14) வில் மார்ச் மாதம் 7ம் திகதியன்று 1:00 மணிக்கு ஆரம்பமாகும் இன் நிகழ்வில் மறைந்த பேராசிரியர் சேர் நைஜெல் றொட்லி அவர்களின் கருத்துருவாக்கத்தில் உருவான ‘ த லோங் ஹோல்’ (The Long Haul) என்ற படமும் காண்பிக்கப்படும். சேர் நைஜெல் நவீன மனித உரிமைகள் விடயத்தின் ஸ்தாபகர்; சித்திரவதை விடயங்களை அவதானிக்கும் மனித உரிமைக் குழுவின் தலைவர்; எசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் நடுவத்தின் ஸ்தாபகர். பலரும் இன்னிகழ்வுக்கு வருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்”.

Related:  அமெரிக்காவில் பணி புரிவதற்கான H-1B, H-4 விசாக்களுக்கு தற்காலிக தடை - அமெரிக்க ஜனாதிபதி பிரகடனம்!

 

 

Print Friendly, PDF & Email