இன்னும் 10 வருடங்களில் ஒரங்குட்டான் குரங்கினம் முற்றாக அழிந்துவிடும்! -

இன்னும் 10 வருடங்களில் ஒரங்குட்டான் குரங்கினம் முற்றாக அழிந்துவிடும்!

இந்தோனேசியா, மலேசியாவில் பாம் எண்ணை தயாரிப்பிற்காகக் காடுகள் அழிக்கப்படுவதே முக்கிய காரணம்
An emaciated orangutan and her child – named Mama Anti and Baby Anti – are rescued by volunteers
போர்ணியோவில் காட்டுத் தீயிலிருந்து தன் குழந்தையைக் காப்பாற்றிய ஒரங்குட்டான் தாயைக் கிராமத்தவர்கள் அடித்துக் காயப்படுத்தினார்கள்

ஒரங்குட்டான் குரங்கினம் இன்னும் பத்து வருடங்களில் இப் பூமியிலிருந்து மறைந்துவிடும் என் எச்சரிக்கிறது விலங்குப் பாதுகாப்பு அமைப்பு.

இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் பாம் எண்ணை (palm oil) தயாரிப்பிற்காக காடுகளை அழிப்பதே இந் நிலைமைக்குக் காரணம் என அவ்வமைப்பு கூறுகிறது.

கடந்த 25 வருடங்களில் இந்தோனேசியாவின் காடுகளின் 25% – 76 மில்லியன் ஏக்கர்கள், அண்ணாளவாக ஜேர்மனியின் அளவு – எரிக்கப்பட்டுவிட்டன. இதற்கு முக்கியமான காரணம் பாம் எண்ணைக்கான தாவரங்களை வளர்ப்பதற்காகவே. உருளைக்கிழங்குப் பொரியல்கள், பிட்சாக்கள், நூடில்கள், டோனட்டுகள், பற்பசைகள், ஷம்பூக்கள், டீசல் ஆகிய பண்டங்களின் தயாரிப்பிற்கு பாம் எண்ணையே பாவிக்கப்படுகிறது.

பெப்சிகோ, ஜோன்சன் அண்ட் ஜோன்சன், கோல்கேட்-பாமோலிவ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்திகளில், காடுகளை அழித்துப் செய்யப்பட்ட பாம் தாவரங்களில் பெறப்பட்ட எண்ணையைப் பாவிக்கின்றனவென ‘கிறீன் பீஸ்’ (Green Peace) அமைப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.

“ஒரங்குட்டான் இனம் முற்றாக அழிந்துபோவதற்கான தருணத்தில் இருக்கிறது. தற்போதய வேகத்தில் காடுகள் அழிகப்படுமாகில் அவற்றை எங்களால் காப்பாற்ற முடியாமல் போய்விடும் ” என போர்ணியோ நாட்டில் விலங்கு மீட்புப் பணிகளைச் செய்துவரும் சர்வதேச விலங்கு மீட்பு (International Animal Rescue) அமைப்பின் நிர்வாக இயக்குனர் அலன் றைட் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச கூட்டமைப்பு (International Union for the Conservation of Nature-ICUN) என்ற அமைப்பு உலகினின்றும் அழிந்துபோய்க்கொண்டிருக்கும் உயிரினங்களைப் பற்றிய ‘சிவப்பு அறிக்கைகளை‘ அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. சென்ற மாதம் அது போர்ணியா ஒரங்குட்டானையும் தன் அறிக்கையில் சேர்த்துக்கொண்டது. சுமத்திராவின் ஒரங்குட்டான் ஏற்கெனவே அப் பட்டியலில் இருக்கிறது. 1950 முதம் 2010 வரையில் போர்ணியாவின் ஒரங்குட்டான் எண்ணிக்கை 60 வீதத்தால் குறைந்துள்ளது. 2022 இல் அது மேலும் 22 வீதத்தால் குறைந்துவிடும் என்கிறது இந்த அமைப்பு.

Please follow and like us:
error0