இனப்பிரச்சினையைக் கிளப்பும் ராஜபக்சக்களின் திட்டம் அம்பலமானது!

இனப்பிரச்சினையைக் கிளப்பும் ராஜபக்சக்களின் திட்டம் அம்பலமானது!

Spread the love

நவம்பர் 15, 2019

வாக்களிப்பு தொடங்குவதற்கு இறுதி சில மணித்தியாலங்களே இருக்கையில் வடக்கு கிழக்கு மக்களிடையே இனப்பிரச்சினையைக் கிளறிவிடும் ராஜபக்சக்களின் திட்டமொன்று தெரியவந்துள்ளதாக லங்கா நியூஸ்வெப் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையே ரகசிய ஒப்பந்தமொன்று செய்யப்பட்டுள்ளதென்றும் அதன் பிரகாரம் வடக்கிலுள்ள சிங்கள மக்கள் வெளியேற்றப்டவிருக்கிறார்களென்றும் பொய்யான செய்தியொன்றைத் தெற்கிலுள்ள சிங்கள வாக்காளர்களுக்குத் தெரிவிக்கும் இரகசியத் திட்டமொன்றை ராஜபக்ச முகாம் தயார்நிலையில் வைத்திருக்கிறதென்று அவ்விணையத் தளம் தெரிவிக்கிறது.

இத்திட்டத்தின்படி, இன்றிரவு 10 மணிக்கு ராஜபக்சக்களுடன் நெருக்கமான தொலைக்காட்சி செய்தியை வெளியிடவிருந்தது.

இச் செய்தியின் நம்பகத் தன்மையை அதிகரிக்க உதவும் வகையொல் இது தொடர்பான போலியான பத்திரமொன்றும் தயார் நிலையில் உள்ளதாக அது கூறுகிறது.

இத் திட்டத்தின்படி இனப்பிரச்சினையைத் தூண்டிவிடுவதன் மூலம் தமிழ், முஸ்லிம் வாக்காளர்களை வாக்களிக்கும் நிலையங்களுக்குச் செல்லமுடியாமற் தடுப்பதுவே அவர்களது நோக்கமாகும்.

கோதபாயவின் தீர்க்கப்படாத அமெரிக்கக் குடியுரிமை பற்றிய செய்தியிலிருந்து வாக்காளரின் கவனத்தைத் திருப்புவதும் இத் திட்டத்தின் நோக்கமெனவும் ‘உள்வீட்டுத் தகவல் மூலத்தைக்’ குறிப்பிட்டு லங்கா நியூஸ்வெப் செய்தி வெளியிட்டுள்ளது.

Print Friendly, PDF & Email