இந்தோ-பாக்கிஸ்தான் போர் உக்கிரமடைகிறது
- பால்காட்டில் (பாக்கிஸ்தான்) இந்தியா மேற்கொண்ட தாக்குதலில் 350 க்கும் அதிகமான தீவிரவாதிகள் பலி?
- புல்வாமா தாக்குதலில் ஜெ.இ.மொ. தீவிரவாதிகளின் பங்கு பற்றிய ஆதாரங்களை இந்தியா வழங்கியது
- போரைத் தவிர்த்து பேச்சுவார்த்தைக்கு வரும்படி பாக். பிரதமர் இந்தியாவுக்கு அழைப்பு
- கைது செய்யப்பட்ட இந்திய விமானியைப் போர் விதிமுறைகளுக்கமையக் கையாள வேண்டுமென இந்தியா கோரிக்கை
- ஜம்மு-காஷ்மீரின் நோஷேறா பகுதியிலுள்ள இந்திய இராணுவத் தலைமைத் தளம் மற்றும் எண்ணைத் தளங்களைத் தாக்க பாக். முயற்சி
இந்தோ – பாக்கிஸ்தான் போர் ஆபத்தான கட்டத்தை எட்டியிருக்கிறது. பாக் எல்லைக்குள் செண்ற இரு போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது. அவற்றில் ஒரு விமானத்தின் ஓட்டியான கேரளாவைச் சேர்ந்த வர்த்தமன் அபினந்தனைக் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் இரணுவம் தெரிவித்துள்ளது. அபினந்தன் மிக மோசமாகத் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவரை உடனடியாக மீளத் தரும்படி இந்தியா கேட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
அதே வேளை 10 க்கும் அதிகமான பாக்கிஸ்தான் F-16 ரக போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் பிரவேசித்து ஜம்மு-காஷ்மீர் நோஷேற பகுதியிலுள்ள இராணுவத் தலைமைச் செயலகம் மற்றும் எண்ணை சேகரிப்பு நிலையங்களைத் தாக்க முயற்சித்ததாகவும் பாக். விமானங்களின் வருகையை அறிந்து அவற்றை இடை மறித்துத் தாக்கிய போது பாக் விமானப்படைக்குச் சொந்தமான ஒரு F-16 விமானம் தாக்கப்பட்டிருக்கலாம் என இந்திய தரப்பு நம்புகிறது. இத் தாக்குதலின்போது இந்திய விமானப்படைக்குரிய MIG 21 விமானமொன்று திரும்பி வரவில்லை.
பெப்ரவரி 14 இல் நடைபெற்ற புல்வாமா தாக்குதலின் பின்னணியில் தீவிரவாத அமைப்பான ஜைஷ்-ஈ-மொஹாமெட் இருக்கிறதென இந்திய தரப்பு ஆதாரங்களை பக்கிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. இவ்வமைப்பின் முகாம்கள் மட்டுமல்ல அதன் முக்கிய தலைவர்களும் பாக்கிஸ்தான் எல்லைக்குள்ளான பிரதேசங்களில் இருக்கின்றனர் என்பதை இவ்வாதாரங்கள் வலுப்படுத்துவதாக இந்திய தரப்பு கூறுகிறது. இவ்வாதாரங்களைக்கொண்டு பாக்கிஸ்தான் தனது எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலிருந்து மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகள் மீது உரிய, காத்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென இந்தியா இந்தியா எதிர்பார்ப்பதாக அதன் பேச்சாளர் கூறினார். வெளி விவகார அமைச்சினால் தருவிக்கப்பட்ட பாக். தூதுவர் சாயிட் ஹெய்டர் ஷா இவ்வாதாரங்களைப் பெற்றுக்கொண்டார்.
பெப்ரவரி 26 ம் திகதி இந்தியா பாக்கிஸ்தானிலுள்ள பாலகொட் பிரதேசத்திலுள்ள ஜெம் முகாம்களின் மீது தாக்குதல்களை நடத்தியிருந்தது ஆனால் அவை பாக்கிஸ்தான் இராணுவத்தின் மீதான தாக்குதல்கள் அல்ல எனவும் இதைத் தொடர்ந்து பெப்ரவரி 27 இல் பாக்கிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்றும் இந்தியா கூறுகிறது. பாலகொட் தாக்குதலின்போது சுமார் 325 தீவிரவாதிகளும் 27 பயிற்சியாளர்களும் கொல்லப்பட்டார்கள் என உறுதிப்படுத்தாத செய்திகள் தெரிவிக்கின்றன. இத் தாக்குதலைப் பாக்கிஸ்தானோ, தீவிரவாதிகளோ எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் அனைவரும் தூக்கத்திலிருந்த வேளை தாக்குதல் நடைபெற்றது எனவும் இந்தியத் தரப்புகள் தெரிவிக்கின்றன.
[su_youtube url=”https://youtu.be/9NcHRu2VaRg” width=”300″ height=”200″]