Spread the love

ஆபிரிக்க அமெரிக்கர்கள் கடைசி இடத்தில்

சராசரி குடும்ப வருமானத்தை அடிப்படையாகக்கொண்டு தரம் பிரித்துப் பார்த்தபோது இந்திய வம்சாவளியினரே அதிக உச்சத்தில் இருக்கிறார்கள் என அறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிந்திய கணக்கெடுப்பில் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டபோது இவ் விடயம் தெரியவந்துள்ளது.

2015 இல் மேற்கொள்ளப்பட்ட இக் கருத்துக்கணிப்பின்படி, சராசரி குடும்ப வருமானமாக US$ 100,500 இந்திய வம்சாவளிக் குடும்பம் ஒன்று எடுத்திருக்கிறது. ஆகக் குறைந்த குடும்ப வருமானத்தை ஆபிரிக்க- அமெரிக்க இன மக்கள் (US$ 35,000) பெற்றிருக்கிறார்கள்.

இலங்கையர்கள், சராசரி குடும்ப வருமானமாக US$ 74,600 ஐப் பெற்று 4 வது இடத்திலும், வெள்ளை இன அமெரிக்கர்கள் US$ 59,000 ஐப் பெற்று 9 வது இடத்திலும் இருக்கிறார்கள்.



இந்திய வம்சாவளியினரே அமெரிக்காவின் சராசரி பணக்காரர்கள் 1

இந்திய கலாச்சார விழுமியங்கள், கடும் உழைப்பு, ஒழுக்கம், கல்வியில் குறி, சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்தல், விடா முயற்சி ஆகியன இந்தியரின் இச் சாதனைக்குக் காரணமாகவிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடியேறுவதற்கு பெருந்தொகையானோர் விண்ணப்பிப்பிதனால் அவர்களில் மிகச் சிறந்தவர்களுக்கே குடிவரவுக்கான அனுமதி கிடைக்கிறது. அதனால் அவர்களது வருமானங்களும் அதற்கேற்ப உயர்வாகவே இருக்கின்றன.

அதிபிரசித்தமான உயர்குடியினர் கல்விபயிலும் பல்கலைக்கழகங்களில் (Ivy League) இடம்பெறுவது முதல், ஹொலிவூட், ஊடகங்கங்கள். நீதித்துறை, அரசியல் என வெள்ளையர்கள் பொதுவாகக் கோலோச்சும் துறைகளில் எல்லாம் தற்போது இந்தியர்களும் நுழையத் தொடங்கிவிட்டார்கள். அரசியலில் மிக முக்கியமான செல்வாக்கு மிக்க வாக்குவங்கியை அவர்கள் தம்மகத்தே வைத்துள்ளார்கள். இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளுவதும், தாம் கற்றறிந்த அனுபவத்தை இந்தியாவின் மேன்மைக்காகப் பயன்படுத்துவதும், இந்தியாவின் மிக முக்கியமான வெளிநாட்டுச் செலாவணியை உழைத்துக்கொடுக்கும் ஒரு குழுமமாகவும் இவர்கள் இருக்கிறார்கள்.



பிரதியுபகாரமாக, இந்தியர்கள் தமது சுவையான உணவையும், யோகாசனம் போன்ற வாழ்வியல் நுட்பங்களையும் அமெரிக்காவிற்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். உலகின் அதி சிறந்த ஆரோக்கியமான காலை ஆகாரமென இட்லிக்குப் பெயர் எடுத்துத் தந்ததும், யாழ்ப்பாணத்து சுவையுடனான தோசைக்கு நியூ யோர்க் நகரில் மக்கள் வரிசையில் நிற்பதும் ‘இந்திய’ சாதனைகள்.

இதை அறிந்துதான் ஜனாதிபதி ட்றம்ப் H-1B விசாக்களை நிறுத்தினாரோ என்னவோ.

Print Friendly, PDF & Email
Related:  கந்த சஷ்டி கவசம் விவகாரம் | கறுப்பர் கூட்டத்தினர் கைது, காணொளிகள் அகற்றப்பட்டன!