இந்திய-சீன எல்லையில் பதற்றம், இரு தரப்பும் துப்பாக்கிச் சூடு!
செப்டம்பர் 08, 2020: லடாக் பிரதேசத்திலுள்ள பாங்கொங் ஏரிக் கரையில் நிலைகொண்டிருக்கும் இந்தியப் படைகள் மீது சீன இராணுவத்தினர் இன்று துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும், எச்சரிக்கைக்காக இந்தியப் படைகளும் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதாகவும் இந்தியத் தரப்பு தெரிவிக்கிறது.
எல்லைக் கோட்டில் நடைபெற்ற இச் சம்பவத்தின் பின்னர் எல்லாம் அமைதியாகிவிட்டது என இந்திய அரச தரப்புத் தெரிவித்திருக்கிறது.
செப்டம்பர் 7 அன்று இந்தியத் தரப்பு எல்லைக் கோட்டைத் தாண்டிச் சீனப் பிரதேசத்துக்குள் சட்டத்துக்குப் புறம்பாகப் பிரவேசித்து, எல்லையின் மேற்குப் பகுதியான பாங்கொங் ஹூனாநில் புகுந்தது என சீனத் தரப்பு அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.
இதற்கு மறுப்புத் தெரிவித்த இந்தியா, நடந்த சம்பவம் சீன நடவடிக்கைகளின் எதிர்வினையாக்ச் செய்யப்பட்டது எனத் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து நடைபெற்ற சம்பவங்களில் இது இரண்டாவதாகும்.
இதே வேளை, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர், இன்னும் இரண்டு நாட்களில், சீன வெளி விவகார அமைச்சர் வாங் யி அவர்களை மொஸ்கோவில் சந்தித்து சமீபத்திய சம்பவங்கள் பர்றிப் பேசவிருக்கிறார். தற்போதைய நிலைமை கவலை தருவதாக இருக்கிரது என அவர் தெரிவித்திருக்கிறார்.