இந்திய கோவிட் பெருந்தொற்று நிதிக்கு அனைத்துலக மருத்துவநல அமைப்பு (IMHO) பங்களிப்பு!

இந்தியாவைத் துவம்சம் செய்துவரும் கோவிட் பெருந்தொற்று நிவாரண நிதிக்காக அங்கு களப்பணிகளை மேற்கொண்டிவரும் எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பிற்கு, அனைத்துலக மருத்துவ நல அமைப்பு $10,000 டாலர்களை நன்கொடையாக வழங்கியிருக்கிறது.

எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு (Médecins Sans Frontières (MSF) International) என்னும் தொண்டு அம்்தற்போது இந்தியாவின் மிக மோசமாகப் பாதிப்புற்ற மும்பாய் நகரத்தில் தனது களப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வமைப்புடன் இணைந்து அனைத்துலக மருத்துவ அமைப்பும் மீக நீண்டகாலமாகப் பணியாற்றி வருகிறது.

மும்பாய் நகரம் இந்தியாவிலேயே அதிக சனச்செறிவுள்ள நகரமாகையால் அங்கு நோய்ப் பரவலும் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது. மிகவும் தரக்குறைவான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட நகரமாகையால் இங்கு தொற்றின் வீதம் ஒப்பீட்ட்டளவில் அதிகமாக இருக்கிறது. அதனால் எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு இங்கு தனது வெளிக்கள மருத்துவமனைகளை உருவாக்குகின்றது. 1000 தீவிர சிகிச்சைக்கான படுக்கைகளைக் கொண்ட இரண்டு வாடிகள் இங்கு அமைக்கப்படவுள்ளன. இதற்கென பெரும் நிதி தேவைப்படுவதால் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (அமெரிக்கா) உடனடியாகப் $10,000 டாலர்களை வழங்கியிருக்கிறது.

இப் பெருமுயற்சிக்குப் பங்களிக்க விரும்புவோர் பின்வரும் விலாசத்துக்குத் தமது பங்களிப்புக்களை வழங்கிக் கொள்ளலாம்:

Pandemic India – IMHO, P.O.Box. 341466, Columbus, Ohio 43234 என்ற விலாசத்துக்குத் தமது பங்களிப்பைச் செய்துகொள்ளலாம். இதில் பங்களிக்கப்படும் 100% மான தொகையும் எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பிடம் கையளிக்கப்படுமென அனைத்துலக மருத்துவ நல அமைப்பு தெரிவிக்கிறது.