NewsSri Lanka

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து வட மாகாண மீனவர்களின் படகுப் போராட்டம்


இலங்கைக் கடலெல்லைக்குள் இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறிப் பிரவேசித்து கடல் வளத்தைக் கொள்ளையடிப்பதைத் தடுக்க இலங்கை அரசு போதுமான முயற்சிகளை எடுக்கவில்லையெனக்கூறி வடமாகாண மீனவர் நேற்று மாபெரும் கடல்வழிப் படகுப் போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

“எங்கள் மீனவர்களைக் காப்பாற்று” என்ற வாசகங்களைப் பொறித்த கறுப்புக் கொடிகளைத் தாங்கிய நூற்றுக்கும் மேலான படகுகளில் வடமாகாண மீனவர்கள் முல்லைத்தீவிலிருந்து புறப்பட்டு பருத்தித்துறை வரை, சுமார் 100 கி.மீ. , ஊர்வலமாகச் சென்றிருந்தார்கள்.

இவ்வார்ப்பட்ட கடற் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் எம்.ஏ.சுமந்திரன் பா.உ., சாணக்கியன் ராசமாணிக்கம் பா.உ, ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்திய மீனவரின் அத்துமீறிய கடல்வளக் கொள்ளையயால் வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப்படுவது குறித்து மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மற்றும் இலங்கை அரசு எதுவித கவனமும் எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுமுகமாக இக்கடல் ஊர்வலம் நடத்தப்பட்டது என ராசமாணிக்கம் பா.உ. தனது ருவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.