• Post category:INDIA / HEALTH
  • Post published:April 14, 2020
Spread the love

கோவிட்-19 நோயொழிப்பிற்கென 1.38 பில்லியன் மக்களை, ஊரடங்கு உத்தரவின் மூலம் வீட்டுக்குள் பூட்டி வைத்த இந்திய அரசின் நடவ்டிக்கைகள் வெற்றியளித்துள்ளனவா?

நோய்த் தொற்று தடுக்கப்படவில்லை ஆனால் வரைபடம் மடக்கப்பட்டுள்ளது (flattening the curve) எனப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு மேலும் 19 நாட்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். சிலர் இக்கட்டுப்பாடுகளுக்குப் பணிந்துபோனாலும், முந்திய 21 நாள் ஊரடங்கு எதையாவது சாதித்திருக்கிறதா என்ற கேள்வியும் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.

வரைபடத்தை ஊரடங்கு ஒரு வழியில் மடக்கித்தான் வைத்திருக்கிறது என்கிறார் இதுபற்றிய தரவுகளைச் சேகரித்து ஆராய்ந்து வரும் ஷமிக்கா ரவி. பிரபல புரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டின் முன்னாள் ஆராய்ச்சியாளரான ஷமிக்கா இது பற்றித் தெரிவிக்கையில், ” வரைபடத்தை மடக்குவதில் இந்தியா வெற்றிகண்டு வருகின்றது என்பது உண்மைதான். கோவிட்-19 தொற்று வீதம் தொடர்ச்சியாகக் குறைந்துகொண்டே வருகின்றது. ஆனால், ஏப்ரல் 6ம் திகதி ஊரடங்கு அறிவிக்கபபட்டதிலிருந்து, புதிய தொற்றுக்கள் ஒவ்வொரு 7 நாட்களிலும் இரட்டித்து விட்டது என்பதும் உண்மை” என்கிறார்.

அப்போ முன்னேற்றம்? “ஆம். இதற்கு முன்னர் ஒவ்வொரு 4 நாட்களிலும் அது இரட்டித்து வந்தது. ஏப்ரல் 1ம் திகதி 2059 ஆகவிருந்த தொற்று,ஏப்ரல் 5ம் திகதி, 4289 ஆக (இரண்டு மடங்கு) உயர்ந்திருந்தது” என்கிறார்.

இறப்பு வீதத்தைப் பொறுத்த வரையில், ஊரடங்குக்கு முன்னர் ஒவ்வொரு 4 நாட்களிலும் எண்ணைக்கை இரட்டித்து வந்தது, தற்போது அது 5 நாளைக்கு ஒரு தடவை இரட்டிக்கிறது.

சென்னையிலுள்ள கணித விஞ்ஞான நிலையமும் ( Institute of Mathematical Sciences) கோவிட்-19 தொற்றுக்களை அவதானித்து வருகிறது. உஅலக ரீதியாக தொற்று வீதத்தை அளப்பதற்குப் பாவிக்கும் R Naught அல்லது R0 முறையையே இவர்களும் பாவிக்கிறார்கள். அதாவது ஒரு வைரஸ் எத்தனை பேர்களுக்குத் தொற்றுகிறது என்பதே அந்த அளவு முறை. ஊரடங்குக்கு முதல் 1.83 பேரை ஒரு வைரஸ் தொற்றக்கூடியதாகவிருந்தது. தற்போது அது 1.55 பேருக்கு மட்டுமே தொற்றக்கூடியதாக உள்ளது.

ஊரடங்கு பலனளிக்கிறதா?

முன்னாள் வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வரும், சிறந்த நோய்க் கணிப்பாளருமானடாக்டர் ஜயப்பிரகாஷ் முளியில், “R எண்ணிக்கை குறைந்துகொண்டு போகலாம் ஆனால் தொற்று நிறுத்தப்படவில்லை. தொற்று வீதம் குறைந்துகொண்டு போகிறது என்பது உண்மைதான்” என்கிறார்.

ஊரடங்கு நீக்கப்பட்டால் தொற்று அதிகரிக்குமா?

ஊரடங்கு அகற்றப்பட்டால் நிலைமை பழைய நிலைக்கும் போகும் என்பதில் சந்தேகமில்லை. R என்ணிக்கை 1 இற்கு மேலுள்ள வரைக்கும் தொற்றுத் தொடரும் என்கிறார் டாக்டர் ஜயப்பிரகாஷ்.

அப்போ கால வரையறையற்ற ஊரடங்கு தான் தீர்வா?

“வைரஸை அழித்தொழித்து விடலாமெனச் சிலர் நினைக்கிறார்கள். கொளிகையளவில் அது சரிப்பட்டு வரப் போவதில்லை. இதை ஒதுக்கிக் கொண்டுபோய் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திலோ, அல்லது சமூகத்திலோ குறைவான சமூகத் தொடர்புள்ள இடங்களில் விடுவதன் மூலம் இதை endemic நிலைக்குத் தள்ளுவதாலோ அல்லது மக்கள் சமூகமாக இந் நோய்ய்கு எதிர்ப்பாற்றலை உருவாக்கிக் கொள்ளுவதன் மூலமோ தான் இதைக் கட்டுப்படுத்த முடியும்” என்கிறார் அவர்.(நன்றி: TNM)

Print Friendly, PDF & Email
Related:  கோவிட் தொற்று விசாரணைகளை மேற்கொள்ள உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் சீனா சென்றடைந்தனர்