இந்தியா | வேகமாக அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று!

இந்தியா | வேகமாக அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று!

Spread the love

மொத்தம் 118,000 | புதிய தொற்றுக்கள் 6,088 |24 மணி நேர உயிரிழப்பு 148

நீடிக்கப்பட்ட ஊரடங்கு மூலம் கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்தியா எடுக்கும் முயற்சிகள் பலனளிப்பது போல் தெரியவில்லை. சில மாநிலங்களில் தொற்று அதிகரிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. மத்திய அரசு, ஊரடங்கை மே 31 வரை நீடித்திருக்கிறது.

இன்று (மே 22) காலை 9:30 (இந்தியா நேரம்) வரை மொத்த நோய்த்தொற்றுக்கள் 118,447 எனவும், அதில் 6,088 கடந்த 24 மணித்தியாலங்களில் அறிவிக்கப்பட்டவை எனவும் சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 148 பேர் இறந்திருக்கிறார்கள்.மாநில ரீதியான புள்ளி விபரம் பின்வருமாறு:

  • தமிழ்நாடு: மொத்தம் 13,967, குணமாகியவர்கள் 6,282, இறந்தவர்கள் 94. மே 21 அன்று மட்டும் புதிதாக 776 தொற்றுக்கள் பதியப்பட்டுள்ளன
  • கர்நாடகா: மொத்தம் 1,605, குணமாகியவர்கள் 571, இறந்தவர்கள் 41. மே 21 அன்று மட்டும் புதிதாக 143 தொற்றுக்கள் பதியப்பட்டுள்ளன
  • கேரளா: மொத்தம் 691, குணமாகியவர்கள் 510, இறந்தவர்கள் 5. மே 21 அன்று மட்டும் புதிதாக 24 தொற்றுக்கள் பதியப்பட்டுள்ளன
  • ஆந்திர பிரதேசம்: மொத்தம் 2,605, குணமாகியவர்கள் 1,705, இறந்தவர்கள் 54
  • தெலங்கானா: மொத்தம் 1,699, குணமாகியவர்கள் 1,036, இறந்தவர்கள் 45. மே 21 அன்று மட்டும் புதிதாக 38 தொற்றுக்கள் பதியப்பட்டுள்ளன
  • மஹாராஷ்டிரா: மொத்தம் 41,642, குணமாகியவர்கள் 11,726, இறந்தவர்கள் 1,454. மே 21 அன்று மட்டும் புதிதாக 2,345 தொற்றுக்கள் பதியப்பட்டுள்ளன

மாநிலங்களுக்கிடையேயான மக்கள் நடமாட்டங்களும், நாட்டுக்குத் திரும்புபவர்களும் அதிகரிக்கும் காரணத்தால் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளும் அதிகரிக்கப்படுகின்றன எனவும் இதுவே தற்போதய எண்ணிக்கை அதிகரிப்புக்களுக்குக் காரணம் எனவும் ஊரப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை போதாது என நிபுணர்கள் கருத்துக்கூறியுமுள்ளனர்.

அமெரிக்காவிலுள்ள ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, இன்று (மே 22), உலக ரீதியாக இன்றய தொற்று எண்ணிக்கை விபரம்: 5,102,424 தொற்றுக்கள்; 332,924 இறப்புக்கள் ஆகும்.

Print Friendly, PDF & Email